தந்தத்திற்காக காண்டாமிருகத்தை கொன்ற கும்பல்: பிரித்தானிய இளவரசர் அதிர்ச்சி

Report Print in பிரித்தானியா
தந்தத்திற்காக காண்டாமிருகத்தை கொன்ற கும்பல்: பிரித்தானிய இளவரசர் அதிர்ச்சி

அஸாம் மாநிலத்தின் உயிரியல் பூங்காவை சேர்ந்த கண்டாமிருகத்தை வேட்டைக்கும்பல் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய இளவரசர் வில்லியம்ஸ் மற்றும் அவரது மனைவி இருவரும் அஸாம் மாநிலத்தில் உள்ள கஜிரங்கா உயிரியல் பூங்காவுக்கு நேற்று சென்றனர்.

பின்னர் அங்கிருக்கும் யானை, காண்டாமிருகம் உள்ளிட்ட மிருகங்களுக்கு உணவு அளித்தனர். அழிவு நிலையில் உள்ள மிருகங்களை பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை மேற்கொள்வதற்காகவே இந்த விஜயம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அவர்கள் அங்கிருந்த சென்ற சில மணி நேரங்களில் தந்தத்துக்கு ஆசைப்பட்ட கடத்தல்காரர்கள் ஆண் காண்டாமிருகத்தை சுட்டுக்கொன்றுள்ளனர். ஏ.கே.47 துப்பாக்கி மூலம் சுமார் 80 குண்டுகள் வரை அவர்கள் காண்டாமிருகத்தின் மீது பிரயோகித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட வில்லியம்ஸ் மற்றும் கேத் தம்பதியினர் அதிர்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பெண் காண்டாமிருகம் ஒன்றையும் கடத்தல்காரர்கள் தந்தத்திற்காக சுட்டுக்கொன்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments