மகளை பல வருடங்களாக கற்பழித்த தந்தை: உடந்தையாக இருந்த தாய்

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் தன் முதல் மனைவிக்கு பிறந்த மகளை பல வருடங்களாக மிரட்டி கற்பழித்து வந்த தந்தைக்கு நீதிமன்றம் 19 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

பிரித்தானியா நாட்டின் Buckinghamshire கவுண்டியை சேர்ந்த நபர் ஒருவர், 1970ம் ஆண்டு ஏற்கனவே குழந்தை உள்ள ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

திடீரென அந்த பெண்ணுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட அவரின் கருப்பையை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.

இதனால் அவருக்கு இனி குழந்தை பிறக்காத சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தான் பெற்ற மகளையே தனது கணவருக்கு அந்த பெண் விருந்தாக்கியுள்ளார்.

இதன் காரணமாக அவரின் மகள் தனது 14 வயதில் கர்ப்பமடைந்துள்ளார். பின்னர் ஒரு குழந்தையும் அவருக்கு பிறந்துள்ளது.

இதனிடையில் அந்த நபரின் மனைவி கடந்த 1995 ஆம் ஆண்டு இறந்துள்ளார். பின்னரும் அந்த நபர் அவரின் மகளிடம் அடிக்கடி கட்டாயப்படுத்தி உறவு கொண்டுள்ளார்.

பின்னர் இந்த விடயம் வெளியில் தெரியவர பொலிஸ் அந்த நபரை கைது செய்தனர். பல வருடங்களாக நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வந்துள்ளது.

இந்த கொடும் செயலில் ஈடுபட்ட அந்த நபருக்கு தற்போது 75 வயதாகிறது, அவர் பல வருடங்களாக சீரழித்த பெண்ணுக்கு 54 வயதாகிறது. இந்நிலையில், நீதிமன்றம் அந்த நபருக்கு 19 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments