பிரித்தானியாவில் விஷ வாயு தாக்குதலிலிருந்து மீண்ட உளவாளியின் மகள்: வெளியான தொலைபேசி உரையாடல்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியாவில் Salisburyயில் விஷ வாயு தாக்குதலுக்குள்ளான முன்னாள் உளவாளி Sergei Skripalஇன் மகளான Yulia Skripal கோமாவிலிருந்து மீண்டுள்ளார்.

அவர் உடல் நலம் முன்னேறி வருவதாக தனது உறவினர் ஒருவரிடம் கூறும் தொலைபேசி உரையாடல் ஒன்று வெளியாகியுள்ளது.

விஷ வாயு தாக்குதலுக்குப்பின் Sergei Skripalம் அவரது மகளும் எப்படியிருக்கிறார்கள் என்று வெளியுலகுக்கு தெரியாமலே இருந்த நிலையில் Skripalன் மகள் ரஷ்யாவிலிருக்கும் தனது உறவினர் ஒருவரை தொலை பேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அவர் தனது உடல் நலம் முன்னேறி வருவதாகவும் விரைவில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்ப உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தனது தந்தையும் நன்றாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த தொலைபேசி உரையாடல் பிரித்தானியாவுக்கான ரஷ்ய தூதர் Alexander Yakovenkoஆல் வெளியிடப்பட்டுள்ளது.

Sergei Skripalஇன் மகள் உடல் நலம் முன்னேறியிருப்பதை அடுத்து தாக்குதலுக்குமுன் என்ன நடந்தது என்பதைக் குறித்து அவர் பொலிசாரிடம் தெரிவிப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன.

இதனால் நீண்ட நாட்களாகவே பிரித்தானியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே தொடரும் பனிப்போரில் மாற்றங்கள் ஏற்படுமா என்று உலகமே கவனித்துக் கொண்டிருக்கிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்