கன்னித்தன்மையை விற்றேனா? இளம்பெண் வெளியிட்ட பரபரப்பு தகவல்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

லண்டனில் குடியிருக்கும் இளம்பெண் ஒருவர் தமது பெற்றோர் வாழும் வீட்டை காக்க தனது கன்னித்தன்மையை ஏலத்தில் விற்றதாக வெளியான தகவல் புரளி என அவரே தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான விளம்பரங்கள் அனைத்தும் போலி எனவும், அது வெறும் விளம்பர நாடகம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு Cinderella Escorts என்ற நிறுவனம் தம்மிடம் விளம்பர தூதுவராக செயல்பட முடியுமா எனக் கேட்டு அணுகியதாக கூறியுள்ளார் தற்போது 19 வயதாகும் Aleexandra Kefren.

மட்டுமின்றி ருமேனியாவில் வசிக்கும் தமது பெற்றோருக்கு இது தொடர்பாக எந்த தகவலும் சென்றடையாமல் பாதுகாக்கப்படும் எனவும் அவர்கள் உத்தரவாதம் அளித்தனர் என்றார்.

ஆனால் குறித்த விளம்பரம் வெளியான பின்னர் தமது உற்ற நண்பர்களையும் பெற்றோரையும் தாம் இழந்ததாக Kefren குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும் மொடல் துறையில் பெயரை ஈட்ட அந்த விளம்பரம் தமக்கு உதவியது எனவும், ஒரு ஸ்டார் அந்தஸ்துக்கு உயரவும் அந்த விளம்பரம் கைகொடுத்தது என்றார்.

2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் Kefren-ன் குறித்த விளம்பரம் வெளியானது. அதில், தமது பெற்றோர்கள் தற்போது குடியிருக்கும் வீட்டை இழக்கும் நிலையில் உள்ளதாகவும்,

அதை மீட்க பணம் தேவை எனவும், அதனால் தமது கண்ணித்தன்மையை விற்க முடிவு செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

துவக்க விலையாக 700,000 பவுண்ட்ஸ் எனவும் குறித்த விளம்பரத்தை வெளியிட்ட Cinderella Escorts நிறுவனம் அறிவித்தது.

விளம்பரம் வெளியாகி 4 மாதங்கள் கடந்து 2017 மார்ச் மாதம் Cinderella Escorts நிறுவனம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

அதில், ருமேனியா இளம்பெண்ணின் கன்னித்தன்மையை 2 மில்லியன் பவுண்டுக்கு விலை போயுள்ளதாகவும் தெரிவித்தது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்