அவர்களா இவர்கள்: ராஜ குடும்பத்தினரின் அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள்

Report Print Balamanuvelan in பிரித்தானியா
876Shares

பிரபலங்களை புகைப்படம் எடுக்கும் புகைப்படக்காரரான Max Butterworth, 2005க்கும் 2008க்கும் இடையே பார்ட்டிகளுக்கு சென்று விட்டு திரும்பும் பிரபலங்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அதில் ராஜ குடும்பத்தினர் உட்பட பல பிரபலங்களின் புகைப்படங்கள் அவர்களா இவர்கள்? என அதிர்ச்சியுடன் கேட்க வைக்கின்றன.

அமைதியே உருவாக மென்மையான புன்னகையுடன் மட்டுமே இதுவரை காட்சியளித்த இளவரசி கேட்டின் முகத்தைப் பார்க்க முடியவில்லை.

போதை நிறைந்த கண்களும் புன்னகை காணாமல் போன முகமுமாக அவர் டாக்ஸி டிரைவரிடம் எங்கு போக வேண்டும் என்று கூறும்போது அந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இளவரசர் வில்லியமோ கீழே விழுந்து விடாமல் இருப்பதற்காக முன் இருக்கையைப் பிடித்துக் கொள்கிறார்.

முன் நாட்களில் பாப்பராஸி புகைப்படக்காரர்களை தாக்குபவர் என்று பெயரெடுத்த ஹரியைப் பார்த்தால், ஆள் அடையாளமே தெரியவில்லை. நல்ல வேளையாக இந்த படத்தை எடுக்கும்போது அவர் யாரையும் தாக்கவில்லையாம்.

ராஜ குடும்பத்தவர்களாக இருந்தாலும் நாங்களும் மனிதர்கள்தான் என்பதை நிரூபிப்பதைப்போல டச்சஸ் ஆஃப் யார்க் இளவரசி சாராவும் வேறொரு முகம் காட்டுகிறார்.

இதுவரை நாம் பார்த்துவந்த புகைப்படங்களில் நாம் பார்த்த பிரபலங்களின் வேறு முகங்களைப் பார்க்கும்போது, அதிர்ச்சி ஏற்படுவதைத் தவிர்க்க இயலவில்லை என்பதுதான் உண்மை.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்