அம்மா எப்ப திரும்ப வருவாங்க? திடீரென சுருண்டு விழுந்து இறந்த தாய்... எதிர்பார்த்து நிற்கும் பிள்ளைகள்

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் பெண்ணொருவர் திடீரென கீழே சுருண்டு விழுந்த மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஷெல்லி ஹார்விக் (39) என்ற பெண்ணுக்கு திருமணமாகி சோனு (7), எலீஸ் (14), லீவிஸ் (21) என்ற மகன்களும் சோலே (18) என்ற மகளும் உள்ளனர்.

கேளிக்கை விடுதியில் ஷெல்லி வேலை செய்துவந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் பணிமுடிந்து வீட்டுக்கு கிளம்பியுள்ளார்.

அப்போது திடீரென கீழே சுருண்டு விழுந்தார் ஷெல்லி. இதையடுத்து அவருக்கு முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டும் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து ஷெல்லியின் தோழி தன்யா கூறுகையில், ஷெல்லியின் இளைய மகன் சோனு தாய் எப்போது வருவார் என கேட்கிறான், அவனுக்கு நடந்த விடயம் எதுவுமே புரியவில்லை.

அன்பான தாயாக அவர் தன் பிள்ளைகளுக்கு இருந்தார். என்னிடம் ஒரு முறை நெஞ்சு வலிக்கிறது என ஷெல்லி கூறினார்.

இது சம்மந்தமாக அவரை மருத்துவரிடம் அழைத்து சென்றபோது நெஞ்சு எரிச்சலுக்கான மருந்தை கொடுத்தார்கள்.

ஷெல்லின் பிரேத பரிசோதனை முடிவுக்கு பின்னரே அவரின் இறப்புக்கான காரணம் தெரியவரும். தற்போது நிதியுதவியை பலரிடம் இருந்து பெற்று வருகிறோம்.

இந்த பணத்தை வைத்து தாயை இழந்த ஷெல்லியின் பிள்ளைகள் கிறிஸ்துமஸ் பண்டிகையை சிறப்பாக கொண்டாட வைப்போம் என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers