ஆண் கூறிய அந்த ஒரு வார்த்தை: ஒட்டுமொத்தமாக உருவத்தை மாற்றிய பெண்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

'உடல் எடையை குறைத்தால் அழகாக இருப்பீர்கள்' என ஒரு ஆண் கூறியதை கேட்டு ஒட்டுமொத்தமாக தன்னுடைய கொழுப்பை குறைத்து பிரித்தானிய பெண் ஒருவர் தோற்றத்தை மாற்றியுள்ளார்.

பிரித்தானியாவை சேர்ந்த கிளெய்ர் முர்ரே என்ற 35 வயது பெண் 126 கிலோ உடல் எடையில் இருந்துள்ளார். இவர் கடந்த 2015ம் ஆண்டு விமானத்தில் பயணம் செய்துள்ளார்.

அப்போது அதிகமான உடல் எடையின் காரணமாக சீட் பெல்ட்டை அணிய முடியாமல் தவித்துள்ளார்.

இதனை பார்த்த சக ஆண் பயணி ஒருவர், "உடல் எடையை குறைத்தால் நீங்கள் அழகாக இருப்பீர்கள்" என கூறியுள்ளார். அன்றிலிருந்து உடல் எடையை குறைப்பதில் ஆர்வம் காட்டிய கிளெய்ர், தினமும் அதிகாலை 4.30 மணிக்கெல்லாம் எழுந்து வாக்கிங் செல்ல ஆரம்பித்துள்ளார்.

உடற்பயிற்சி கூடத்தில் சேர்ந்து பயிற்சி பெற ஆரம்பித்துள்ளார். கொழுப்பை அதிகரிக்காத சத்தான உணவு வகைகளை உட்கொள்ள ஆரம்பித்துள்ளார்.

அதன் விளைவாக அடுத்த 6 மாதங்களில் 62 கிலோ உடல் எடையை குறைத்து வெற்றி கண்டுள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள கிளெய்ர் முர்ரே, எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. விமானத்தில் நான் சிரமப்பட்டபோது தான், நான் அதிகமான உடல் எடையில் இருக்கிறேன் என்பதை உணர்ந்தேன்.

எடை குறைந்ததால் எனக்கு எந்தவித வருத்தமும் இல்லை. இந்த சமயம் உடற்பயிற்சி கூடத்திற்கு தான் நன்றி சொல்ல விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்