உயரமான கட்டிடத்தின் உச்சியில் நின்று காதல் ஜோடி எடுத்த விபரீத முடிவு: அதிர்ச்சி சம்பவம்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

ஸ்பெயினில் படித்து வந்த பிரித்தானிய இளைஞர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட உடனே 14 வயது சிறுமி 64 அடி உயர கட்டிடத்திலிருந்து குதிக்க முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்பெயின் நாட்டில் படித்து பிரித்தானியாவை சேர்ந்த ரிச்சர்ட் பிட்ஸ்ஸிமன்ஸ் என்ற 16 வயது சிறுவன், 14 வயதான ஒரு சிறுமியை காதலித்து வந்துள்ளார்.

இருவரும் தங்களுடைய நண்பர்கள் மற்றும் பெற்றோரிடம், வெளியில் கடைக்கு சென்றுவிட்டு வருவதாக கூறிவிட்டு கிளம்பியுள்ளனர்.

அப்போது திடீரென அந்த சிறுமி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நான் இதற்குமேல் வாழ விரும்பவில்லை என பதிவிட்டுள்ளார்.

அதனை தொடர்ந்து, "என்னை எப்போதும் நேசித்த, ஆதரவளித்தவர்களுக்கு என்னுடைய நன்றி. நானும் உங்களை நேசிக்கிறேன். நான் உங்களை விட்டு பிரியப்போகிறேன்" என பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த அவருடைய நண்பர்கள் மற்றும் பெற்றோர் உடனடியாக அவர்கள் இருந்த பல்பொருள் அங்காடிக்கு தகவல் கொடுத்தனர்.

உடனே விரைந்து சென்ற ஊழியர்கள் மாடியின் மேல் பகுதியில் பார்த்தபோது, 14 வயது சிறுமி 64 அடி உயர மாடியில் விளிம்பில் குதிக்க ஆயத்தமாக இருப்பதை அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஆனால் அதேசமயம் மற்றொரு கடையின் உச்சியில் நின்றுகொண்டிருந்த ரிச்சர்ட் வேகமாக தரையில் குதித்தான். இதில் சம்பவ இடத்தியிலேயே அவன் உயிரிழந்தான். காதலன் இறந்த அதிர்ச்சியில் பயந்துபோய் நின்று கொண்டிருந்த அந்த சிறுமியை வெறும் 30 வினாடிகளில் வேகமாக கட்டிடத்தின் காவலாளி மீட்டெடுத்தார்.

இதனையடுத்து மீட்கப்பட்ட அந்த சிறுமி மனநல மருத்துவமனைக்கு ஆலோசனைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers