பிரித்தானியாவில் திறக்கப்பட்ட இந்திய வீரர் சிலை

Report Print Kabilan in பிரித்தானியா

பிரித்தானியாவின் மேற்கு மிட்லாண்ட்ஸில், முதலாம் உலகப்போரில் போரிட்ட இந்திய வீரர்களின் நினைவாக சிலை திறக்கப்பட்டது.

முதலாம் உலகப் போர் நடைபெற்ற சமயத்தில் பிரித்தானிய இந்தியப்படை சார்பில், லட்சக்கணக்கான தெற்காசிய வீரர்கள் போரில் ஈடுபட்டனர்.

இந்தப் போர் நடைபெற்று 100 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில், இந்த நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதமாக சீக்கிய வீரரின் தோற்றத்தில் 10 அடி உயர வெண்கலச் சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

மேற்கு மிட்லாண்ட்ஸ் அருகே உள்ள ஸ்மெத்விக் எனும் இடத்தில் இந்த சிலையானது நேற்று திறக்கப்பட்டது. இவ்விழாவினை ஸ்மெத்விக்கில் உள்ள குரு நானக் குருத்வாரா அமைப்பினர் முன்னெடுத்து நடத்தினர்.

இதுதொடர்பாக அமைப்பின் தலைவர் ஜதிந்தர் சிங் கூறுகையில், ‘தங்களுடைய சொந்த நாடே அல்லாத ஒன்றுக்காக ஆயிரக்கணக்கான மைல்கள் பயணம் செய்து வந்து போரிட்டு, தங்கள் உயிரையே தியாகம் செய்த வீரர்களுக்கு சிலை திறப்பதில் பெருமை அடைகிறோம்’ என தெரிவித்துள்ளார்.

மேலும், சேண்ட்வெல் கவுன்சில் தலைவர் ஸ்டீவ் எலிங் இதுகுறித்து கூறுகையில், ‘எங்களின் நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த மக்களை நாங்கள் நினைவுகூர வேண்டியது அவசியம்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers