நடுவானில் ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு: பரிதாபமாக பலியான பெண்! இறந்த பின்னரும் நேர்ந்த துயரம்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

தோழிகளுடன் சுற்றுலா சென்றபோது நடுவானில் ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவால் பிரித்தானியாவை சேர்ந்த பெண் பரிதாபமாக பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் செவிலியராக பணியாற்றி வரும் 30 வயதான சார்லோட் கார்ட்டர், தன்னுடைய தோழிகள் இரண்டு பேருடன், ஐக்கிய அமீரகத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார்.

விடுறையையை மகிழ்ச்சியாக கொண்டாட இருப்பதை நினைத்த சார்லோட்டிற்கு, நடு விமானத்தில் திடீரென உடல்நல குறைபாடு ஏற்பட்டுள்ளது.

7 மணி நேர பயணம் முடிந்து ஐக்கிய அமீரக விமான நிலையத்தில் இறங்கியதும், திடீரென நெஞ்சுவலியுடன், சார்லோட்டிற்கு மயக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக காரில் ஏற்றப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். கடந்த மாதம் 29ம் தேதி உயிரிழந்த சார்லோட் பயணத்திற்கு முன்பாக பயணக் காப்பீடு எடுத்து செல்லாததால், அவருடைய உடல் பிரித்தானியாவிற்கு கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

மருத்துவ செலவீனங்கள் £ 30,000 பவுண்டுகளை கழித்தல் மட்டுமே அவருடைய உடல் இங்கிலாந்திற்கு கொண்டு வர முடியும் என்பதால், அவருடைய பெற்றோர் தற்போது நிதி திரட்டி வருகின்றனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers