தன்னுடைய இறுதிச்சடங்கிற்கு நிதி திரட்டிய நடிகை! எவ்வளவு கிடைத்தது தெரியுமா? நெஞ்சை உருக்கும் சம்பவம்

Report Print Santhan in பிரித்தானியா

ஸ்காட்லாந்தைச் சேர்ந்த நடிகை புற்று நோயால் இறந்துபோவேன் என்பதை அறிந்த பின், தன்னுடைய இறுதிச்சடங்கிற்கு நிதி திரட்டிய சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது.

ஸ்காட்லாந்தின் Glasgow-வைச் சேர்ந்தவர் Shirley Hellyar.

40 வயதான இவர் Netflix சீரியலில் நடித்துள்ளார்.

ஆனால் அந்த சீரியல் வெளியாவதற்கு இரண்டு தினங்களுக்கு முன்பே புற்றுநோயின் காரணமாக பரிதாபமாக இறந்துள்ளார்.

அதுமட்டுமின்றி இவர் தன்னுடைய இறுதிசடங்கிற்கு நிதியும் திரட்டியுள்ளார்.

இது குறித்து உள்ளூர் ஊடகம் தெரிவிக்கையில், Shirley Hellyar-க்கு 2017-ஆம் ஆண்டு lymphoblastic lymphoma பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின் அவரது நுரையீரலில் கட்டி ஒன்று உருவாகியது.

கடந்த செப்டம்பரில் அந்த கட்டி சுருங்கிவிட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து சென்ற மாதம் அதாவது அக்டோபர் மாதத்தில் Newcastle-க்கு தன் நண்பர்களுடன் சென்றிருந்தார்.

அப்போது அவருக்கு திடீரென்று மார்பில் வலி ஏற்பட்டுள்ளது. இதனால் உடனடியாக மருத்துவர்களிடம் சென்று பார்த்த போது, இன்னும் 5 வாரங்கள் மட்டுமே நீங்கள் உயிருடன் இருக்க முடியும் என்று அதிர்ச்சி தகவலை கூறியுள்ளனர்.

இவரின் சகோதரரும் 16 வயதில் புற்றுநோயின் காரணமாகத் தான் இறந்தார். அவரின் இறுதிச்சடங்கினை பெற்றோர் பார்த்தனர். ஏற்கனவே மகனை இழந்த அவர்கள் தன்னுடைய மகளின் நிலையை நினைத்து வருந்தியுள்ளனர்.

இந்த நேரத்தில் Shirley Hellyar திடீரென்று தன்னுடைய இறுதிச்சடங்கிற்காக ஆங்கில இணையதளம் மூலம் நிதி திரட்டியுள்ளார். அதில் இவருக்கு 300 பேர் உதவ, இறுதியாக 6,956 பவுண்ட் கிடைத்துள்ளது.

இந்நிலையில் Newcastle-ன் Gosforth பகுதியில் இருக்கும் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த இவர் கடந்த 7-ஆம் திகதி மரணமடைந்தார்.

இவர் தன் நண்பர்களிடம் ஏற்கனவே என் பெற்றோர் சகோதரரின் மறைவின் போது அவனுக்கு இறுதிச்சடங்கு செய்ய எல்லா வேலைகளும் செய்தனர். அதில் இருந்து இன்றும் அவர்களால் மீளமுடியவில்லை.

எவரும் தன்னுடைய இறுதிச்சடங்கிற்கு நிதி திரட்டியதில்லை என்று நினைக்கிறேன், அதனால் தானே என்னுடைய இறுதிச்சடங்கிற்கு நிதி திரட்டவுள்ளேன், இது என்னுடைய பெற்றோருக்கு உதவியாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்