ஆசையாக வளர்த்த நாயின் மரணம்.. 4000 பவுண்ட் செலவில் ராஜ மரியாதையுடன் இறுதி சடங்கு செய்த பெண்!

Report Print Kabilan in பிரித்தானியா

பிரித்தானியாவைச் சேர்ந்த பெண் ஒருவர், தான் வளர்த்த நாய் இறந்ததைத் தொடர்ந்து சுமார் 4,000 பவுண்டுகள் செலவில் இறுதி சடங்கு செய்துள்ளார்.

Staffordshire பகுதியைச் சேர்ந்த 37 வயது பெண் சாஷா ஸ்மாஜிக். இவர் Bull Terrier இனத்தைச் சேர்ந்த நாய் ஒன்றை ஆசை ஆசையாய் வளர்த்து வந்தார். அதற்கு கேப்டன் என பெயர் வைத்த சாஷா, தனது குடும்ப உறுப்பினர் போல அந்த நாயை பாவித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று கேப்டன் இதயக்கோளாறினால் மரணமடைந்தது. இதனால் மிகுந்த சோகத்தில் இருந்த சாஷா ஒரு வாரம் சாப்பிடாமல் இருந்துள்ளார்.

(Picture: Kennedy News and Media)

அதன் பின்னர் குடும்ப உறுப்பினரின் இறப்பைப் போல ஆடம்பரமாக செலவு செய்து தனது நாயை அடக்கம் செய்ய நினைத்தார் சாஷா. அதன்படி, கேப்டனின் அடக்கத்திற்கு 4,249 பவுண்டுகள் செலவு செய்தார். இது இந்திய மதிப்பில் 3 லட்சத்து 87 ஆயிரத்து 631 ரூபாய் ஆகும்.

புறாக்களை வாங்க 225 பவுண்டுகளும், கேப்டன் என்ற பெயரை பூக்களில் செதுக்க 620 பவுண்டுகளும் செலவாகியது. பின்னர், குதிரை வண்டி ஒன்றில் கேப்டனின் சடலத்தை வைத்து வழக்கமாக அவரது நாய் நடைபயணம் செய்யும் பூங்காவுக்கு கொண்டு சென்றார்.

(Picture: Kennedy News and Media)

(Picture: Kennedy News and Media)

அங்கிருந்து கேப்டனின் சவப்பெட்டியை கார் ஒன்றிற்கு மாற்றிவிட்டு, Bedmond எனும் ஊரில் உள்ள கல்லறைக்கு 40 நிமிட பயணமாக கொண்டு சென்றார் சாஷா. அங்கு கவிதை வாசிக்கப்பட்டு, கூடையில் அடைத்து கொண்டுவரப்பட்ட 11 புறாக்கள் பறக்கவிடப்பட்டன.

(Picture: Kennedy News and Media)

அந்த 11 புறாக்களும் கேப்டனின் வயதை குறிப்பதாகும். அதாவது 11 வயதான அந்த நாயின் ஒவ்வொரு வயதிற்கும் ஒரு புறா கணக்காக கொண்டுவரப்பட்டது. அதன் பின்னர் கேப்டன் மண்ணில் புதைக்கப்பட்டு, அதன் மேல் ‘கேப்டன்’ எனும் பெயரில் செதுக்கப்பட்ட பூக்கள் மற்றும் மலர் வளையம் வைக்கப்பட்டன.

(Picture: Kennedy News and Media)

சாஷா கண்ணீருடன் இந்த சடங்கினை செய்து முடித்தார். பின்னர் அவர் தனது செல்லப்பிராணி குறித்து கூறுகையில், ‘என்னில் பாதி சென்றுவிட்டது. எனக்கு அதை செய்ய வலிமை வேண்டும் என்று நான் நினைக்கவில்லை.

இன்னொரு கிறிஸ்துமஸை கொண்டாடுவது குறித்து நான் நினைக்கவில்லை. சிறப்பான முறையில் வழியனுப்பப்பட வேண்டும் என்று கேப்டன் ஆசைப்பட்டான். மற்றவர்களுக்கு அவன் நாய் ஆக இருக்கலாம், ஆனால் எனக்கு அவன் என் குழந்தை.

அவன் தான் எனக்கு எல்லாமும் மற்றும் எப்போதும். நாங்கள் மனிதமும், மிருகமும் என்று நான் நினைத்ததில்லை. ஒரு தேவதையைப் போல் அவனது அடக்கம் இருக்க வேண்டும் என்று விரும்பினேன். அதனாலேயே வெள்ளை மலர்கள் முதற்கொண்டு அனைத்து வெள்ளை நிறத்தில் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.

அவன் இறந்தபோது யாரிடமும் பேச முடியவில்லை. எனது அறையை பூட்டிக்கொண்டு சாப்பிடாமல் 7 நாட்கள் இருந்தேன். என் இதயத்தில் வலி இன்னும் இருக்கிறது’ என கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

(Picture: Kennedy News and Media)

(Picture: Kennedy News and Media)

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers