மாந்திரீகத்திற்காக மகளின் பிறப்புறுப்பை சிதைத்து குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட முதல் பிரித்தானிய தாய்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானியாவில் மாந்திரீகத்திற்காக மகளின் பிறப்புறுப்பை சிதைத்த தாய், குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

உகாண்டாவை பூர்விகமாக கொண்ட 37 வயது தாய் ஒருவர், மாந்திரீகத்திற்காக தன்னுடைய மூன்று வயது மகளின் பிறப்புறுப்பை சிதைத்துள்ளார்.

இவர் தன்னுடைய ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த காதலனுடன், பல வருடங்களாக கிழக்கு லண்டன் பகுதியில் வசித்து வருகிறார்.

கடந்த 2017ம் ஆண்டு தன்னுடைய மகளை லெய்டன்ஸ்டனில் வைப்பின்ஸ் கிராஸ் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமியின் பிறப்புறுப்பு சிதைக்கப்பட்டிருப்பதை பார்த்து சந்தேகத்துடன் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து விரைந்து வந்த பொலிஸார், பெண்ணிடம் விசாரணை மேற்கொள்ளும் போது, என்னுடைய மகள் மேலே இருந்த பிஸ்கட்டை எடுக்க முயற்சிக்கும்போது, நிலைதடுமாறி தரையில் விழுந்தாள்.

அப்போது கீழே கிடந்த உலோகம் ஒன்று அவளுடைய பிறப்புறுப்பை சிதைத்துவிட்டது என கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக சம்மந்தப்பட்ட பெண்ணின் வீட்டில் பொலிஸார் சோதனை மேற்கொள்ள ஆரம்பித்தனர். அப்பொழுது அறுத்து எடுக்கப்பட்ட கால்நடையின் இரண்டு நாக்குகளும், வெட்டி வைக்கப்பட்ட 40 எலுமிச்சைகளையும், பெயர்களுடன் எழுதி வைக்கப்பட்டிருந்த காகிதத்துண்டுகளையும் கைப்பற்றினர்.

இதன்மூலம் அவர் ஒரு மாந்தீரீகவாதி என்பதை பொலிஸார் உறுதி செய்தனர்.

இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்பொழுது, மாந்தீரிகத்தின் மூலம் பேசவிடாமல் மாற்றிவிடுவாரோ என்ற அச்சத்தில் தான் அக்கம்பக்கத்தை சேர்ந்த யாரும் இந்த சம்பவம் குறித்து பேச பயப்படுகின்றனர் என வழக்கறிஞர் வாதாடினார்.

வாதங்கள் அனைத்தையும் கேட்டறிந்த நீதிபதி, குற்றம் சுமத்தப்பட்ட பெண்ணுக்கான தண்டனை விவரம் மார்ச் 8ம் தேதி அறிவிக்கப்படும் என கூறினார்.

மேலும், அவருடைய 43 வயது காதலனை வழக்கிலிருந்து விடுதலை செய்து உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் குற்றவாளிக்கு அதிகபட்சமாக 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இதற்கு முன்பு தொடரப்பட்ட மூன்று வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் முதன்முறையாக தற்போது தான், பிறப்புறுப்பை சிதைத்த பெண் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார் எனவும் கூறியுள்ளனர்.

முன்னதாக FGM எனப்படும் பெண் உறுப்பு சிதைப்பு என்பது பிரித்தானியாவில் தடை செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers