திருமணமாகாதவர் என்று கூறி கோடீஸ்வரரை ஏமாற்றிய பெண்: நீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பு

Report Print Balamanuvelan in பிரித்தானியா

காதல் கண்ணை மறைக்க, ஆன்லைன் டேட்டிங் இணையதளம் ஒன்றில் தான் சந்தித்த பெண்ணை நம்பி, வாழ்க்கை துணையாக்க முடிவு செய்தார் பிரித்தானியக் கோடீஸ்வரர் ஒருவர்.

Marcel Kooter (57) என்னும் அந்த கோடீஸ்வரருக்கு பின்னர்தான் தெரியவந்தது அந்த பெண் தன்னிடம் பழகுவதற்கு சில வாரங்கள் முன்னர்தான் ஒருவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும், அவர் சொன்னதுபோல வங்கி மேலாளராக அவர் பணிபுரியவில்லை என்பதும்.

பல்கேரியாவைச் சேர்ந்த Radeva (37) என்னும் அந்த பெண்ணைக் காதலித்தபோது, காதல் கண்ணை மறைக்க, ஏராளமான பரிசுகளை அள்ளி வழங்கியிருக்கிறார் Kooter.

தங்கள் எதிர்கால வாழ்க்கைக்காக இன்வெஸ்ட் செய்வதற்காக Radevaவுக்கு 182,000 பவுண்டுகளையும் ஆன்லைன் மூலம் ட்ரான்ஸ்பர் செய்திருக்கிறார்.

ஒன்பது மாதங்களுக்கு பின்னர்தான் Radeva ஒரு வங்கி மேலாளர் இல்லை என்பதும், அவர் தன்னை சந்திப்பதற்கு சில வாரங்கள் முன்புதான் இன்னொருவரை திருமணம் செய்தார் என்பதும் Kooterக்கு தெரிய வந்திருக்கிறது. அதிர்ந்துபோன Kooter நீதிமன்றத்தை நாடினார்.

விசாரிக்கும்போது Radeva, தாங்கள் சேர்ந்து வாழ்வதற்காகத்தான் Kooter பணம் செலவழித்ததாகவும், தான் தனது கணவனுடன் சேர்ந்து வாழாததால், தன்னை திருமணமாகாதவள் என கருதிக் கொண்டதாகவும், இப்போது தன்னை பிரிந்து விட்டதால் Kooter இவ்வாறு கூறுவதாகவும் குற்றம் சாட்டினார்.

Kooter தரப்பு வழக்கறிஞரோ, Kooter ஒரு நல்ல குடும்ப வாழ்க்கை வாழலாம் என எண்ணி, Radeva திருமணமாகாதவர் என்று நம்பியே அனைத்தையும் செய்ததாகவும், Radeva ஏமாற்றி விட்டதாகவும் வாதிட்டார்.

நீதிபதி, Radeva மேலாளர் என கையொப்பமிட்டிருந்ததையும், டேட்டிங் தளத்தில் திருமணமாகாதவர் என விளம்பரம் செய்திருந்ததையும் Kooter தரப்பு வழக்கறிஞர் ஆதாரத்துடன் நிரூபித்ததை ஏற்றுக் கொண்டார்.

தன்னுடன் வாழப்போகும் Radevaவை நம்பி, அவர் வங்கி மேலாளர், இன்வெஸ்ட் செய்வதில் தேர்ந்தவர் என்பதையும் நம்பி, அவர் தனக்காக இன்வெஸ்ட் செய்வார் என்று எண்ணித்தான் Kooter அவ்வளவு பெரிய தொகையை கொடுத்திருக்கிறார் என்னும் வாதத்தையும் அவர் ஏற்றுக் கொண்டார்.

காதலின் பெயரால் ஏமாற்றிய Radevaவுக்கு 182,050 பவுண்டுகளை திரும்ப வழங்குமாறும், வட்டியாக 3,641 பவுண்டுகளும், வழக்குச் செலவுக்காக 20,000 பவுண்டுகளும் வழங்குமாறு உத்தரவிட்டு அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளார் நீதிபதி.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers