இளவரசி மேகன் மெர்க்கல் எழுதிய தனிப்பட்ட கடிதம் வெளியானதால் வேதனை: தந்தையின் விளக்கம்

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசி மேகன் மெர்க்கலின் தந்தை தாமஸ் மெர்க்கல், தனது மகள் தனக்கு தனிப்பட்ட முறையில் எழுதிய கடிதத்தை வெளியிட்டதற்காக காரணம் குறித்து முதல் முறையாக பகிர்ந்துள்ளார்.

இளவரசி மெர்க்கல் தனக்கு ஹரியுடன் திருமணம் நடந்த நாள் முதல் தனது குடும்ப பிரச்சனைகளை பொதுவெளியில் காட்டிக்கொள்ளாமல் அமைதியாக வலம் வருகிறார்.

இந்நிலையில், மெர்க்கல் தனது தந்தைக்கு தனிப்பட்ட முறையில் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

அதில், அன்புள்ள தந்தைக்கு, கனமான இதயத்துடன் இதை எழுதுகிறேன்..... எதற்காக நீங்கள் இப்படி செய்கிறீர்கள் என தெரியவில்லை, நான் கூறுவதையும் நீங்கள் புரிந்துகொள்ளவில்லை. நீங்கள் உருவாக்கி கொள்ளும் வழிகளுக்கு ஒரு தவறான பிம்பத்தை தேடாதீர்கள் என எழுதியிருந்தார்.

இது ஒரு தனிப்பட்ட கடிதமாக மெர்க்கல் தனது தந்தைக்கு எழுதியது. ஆனால் தாமஸ் மெர்க்கல் இந்த கடிதத்தை வெளியிட்டதால் மேகன் மெர்க்கல் மனம் உடைந்தார்.

இந்நிலையில் இந்த கடிதத்தை வெளியிட்டதற்கான காரணம் குறித்து தாமஸ் மெர்க்கல் முதல் முறையாக மௌனம் கலைத்துள்ளார்.

நான் எனது மகளை மிகவும் நேசிக்கிறேன், ஒரு தந்தையாக அவள் மீது அதிக பாசம் வைத்துள்ளேன், ஆனால் எங்களை குறித்து பரவும் தவறான தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க இவ்வாறு செய்தேன் என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்