பிரித்தானிய அரச குடும்பத்தில் இப்படி யாரும் செய்ததில்லை: காதல் கணவருக்காக உருகும் மேகன்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் மெர்க்கலுக்கு தனியாக சமையல் கலைஞர்கள் எவரும் இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மேகன் மெர்க்கல், தமது காதல் கணவர் இளவரசர் ஹரிக்கு, தமது கையாலையே உணவு சமைத்து பரிமாறுகிறாராம்.

அமெரிக்காவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வந்த மேகன் மெர்க்கல், எப்போது இளவரசர் ஹரியை திருமணம் செய்துகொள்ள ஒப்புக்கொண்டாரோ அப்போதே அவரது வாழ்க்கை முற்றாக மாறியது என அவரது நெருங்கிய தோழிகள் தெரிவித்துள்ளனர்.

கென்சிங்டன் அரண்மனையில் ஒரு குட்டி இல்லத்தில் குடியிருக்கும் மேகன் மற்றும் ஹரி தம்பதிகள், மிகவும் எளிமையாகவே வாழ்ந்து வருகின்றனர்.

திருமணம் முடிந்தது முதல் தற்போது தனியாக குடியிருக்க ஆரம்பித்ததில் இருந்தே, மேகன் தமது காதல் கணவருக்கு சமைத்து வருவதாக தெரியவந்துள்ளது.

மட்டுமின்றி கென்சிங்டன் அரண்மனையில் உள்ள இல்லத்தில் மேகன் தம்பதிகளை சந்தித்த அவரது தோழிகளுக்கும் மேகன் சமைத்து பரிமாறியுள்ளார்.

மட்டுமின்றி கூந்தல் பராமரிப்புக்கு என மேகன் தனியாக எந்த கலைஞரையும் பயன்படுத்துவதில்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பிரித்தானிய ஊடகங்களால் சமீப காலமாக வில்லியாக சித்தரிக்கபடும் மேகன் மெர்க்கல், உண்மையில் அப்படியல்ல எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்