மருத்துவமனைக்கு சென்ற திருநங்கை... அவரை ஆண் என நினைத்த செவிலியர்... அடுத்து நடந்த சம்பவம்

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் திருநங்கை ஒருவர் தனது நண்பரை பார்க்க மருத்துவமனைக்கு சென்ற போது அவரை ஆண் என செவிலியர் குறிப்பிட்டு பேசிய நிலையில் மருத்துவமனை நிர்வாகம் அதற்கு மன்னிப்பு கோரியுள்ளது.

சாண்டிலி சவுண்டர்ஸ் (34) என்பவர் திருநங்கை ஆவார். இவர் கடந்தாண்டு டிசம்பர் 24ஆம் திகதி தனது நண்பரை காண தனியார் மருத்துவமனைக்கு சென்றார்.

அப்போது அங்கிருந்தவர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை கூறினார் சாண்டிலி.

அங்கிருந்த செவிலியர் ஒருவரிடம் வாழ்த்து சொன்ன போது, அவர் பதிலுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் சார், என ஆண் நபரை குறிப்பிட்டு சொல்வது போல சாண்டிலியிடம் கூறினார்.

ஆனால் தான் ஒரு திருநங்கை என சாண்டிலி கூறியபோது அதை ஒத்துகொள்ளாமல் இருந்துள்ளார் செவிலியர்.

செவிலியரின் இச்செயல் சாண்டிலிக்கு மிகுந்த வருத்தத்தை கொடுத்தது. இது குறித்து அவர் மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் கொடுத்தார்.

இதற்கு பதிலளித்த மருத்துவ நிர்வாகம், நீங்கள் ஆண் போல உடையணிந்ததோடு தாடி வைத்திருந்ததால் உங்களை ஆண் என செவிலியர் நினைத்திருக்கலாம் என தெரிவித்தது.

ஆனால் இந்த பிரச்சனைக்கு முடிவு கிடைக்காமல் விடமாட்டேன் என விடாபிடியாக சாண்டிலி இருந்த நிலையில் தற்போது அவரிடம் மருத்துவமனை நிர்வாகம் மன்னிப்பு கேட்டுள்ளது.

அதில், சாண்டிலியின் பிரச்சனையை அறிய அவரிடம் பேச முனைப்புடன் உள்ளோம். எங்கள் மருத்துவமனைக்கு வந்த போது சாண்டிலுக்கு கசப்பான அனுபவம் ஏற்பட்டிருந்தால் அதற்கு மன்னிப்பு கோருகிறோம்.

இது தொடர்பாக விசாரணை நடத்தினோம், சம்பவத்துக்கு வருத்தம் தெரிவிக்கிறோம் என கூறப்பட்டுள்ளது.

திருநங்கை சாண்டிலி கூறுகையில், நான் ஆணாக இருந்து பெண்ணாக மாறிய திருநங்கை. என்னை ஆணாக கருதி செவிலியர் பேசியது வேதனையளித்தது.

நான் எப்போதும் பெண்ணை போல தான் உடையணிவேன், அதற்கேற்றார் போல தான் மேக்கப் போடுவேன். எனக்கு தாடி கிடையாது.

என்னை மருத்துவமனையில் நடந்திய விதம் மோசமானது என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்