துபாயில் கைது செய்யப்பட்ட பிரித்தானிய தாய் விடுதலை! கதறி அழும் மகள்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

துபாயில் கைது செய்யப்பட்ட பிரித்தானிய பெண்ணுக்கு அபராதம் மட்டும் விதித்து நீதிமன்றம் தீர்பளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

லண்டனை சேர்ந்த லாலெ ஷ்ரவேஷ் (55) என்பவர் தன்னுடைய 14 வயது மகள் பாரீஸ் உடன், முன்னாள் கணவனின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக மார்ச் 10 ம் திகதியன்று துபாய் சென்றிருந்தார்.

அங்கு விமான நிலையத்தில் வைத்து துபாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அதேசமயம் அவருடைய மகள் மட்டும் பிரித்தானியாவிற்கு தனியாக திருப்பி அனுப்பப்பட்டார்.

கடந்த 2016ம் ஆண்டு, தன்னிடம் இருந்து விவாகரத்து பெற்ற கணவன் டாஸ் சாண்டோஸ் (55), ஹம்மாடி (42) என்கிற பெண்ணை திருமணம் செய்துகொண்டது பற்றி, லாலெ ஷ்ரவேஷ் 'கழுதை' என கடுமையாக பேஸ்புக்கில் விமர்சித்திருந்தார்.

இதுகுறித்து ஹம்மாடி கொடுத்த புகாரின் அடிப்படையிலே கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் விளக்கம் கொடுத்திருந்தனர்.

இதற்கிடையில் தாயை விட்டு பிரிந்து உடல்நலமில்லாமல் வீட்டில் தனியாக தவித்து வந்த பாரீஸ், துபாய் அரசரிடம் தனது தாயை நாட்டிற்கு திருப்பி அனுப்புமாறு ஒரு உருக்கமான கடிதம் எழுதி பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் வழக்கு விசாரணையானது நீதிமன்றத்தில் நடந்தது. ஷ்ரவேஷிற்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் £50,000 பவுண்டுகள் அபராதமாக விதிக்கப்படலாம் என நினைத்திருந்த வேளையில், 650 பவுண்டுகள் அபராதமாக விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் அவருடைய பாஸ்போர்ட்டை ஒப்படைக்குமாறும் அறிவுறுத்திருத்தினார்.

இதனையடுத்து பேசிய ஷ்ரவேஷ், இன்று காலை நீதிமன்ற விசாரணை முடிந்த பிறகு இந்த கனவு முடிவடையும் என்று நான் நினைத்தேன்.

இது என்னுடைய வாழ்நாளில் மிகவும் சிறப்பு வாய்ந்த நாள். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த பயங்கரமான துன்பம் முடிந்துவிட்டது. நான் வீட்டிற்கு செல்ல போகிறேன்.

நான் என் மகள் பாரீஸை பார்க்க விரும்புகிறேன். அவளை இறுக்கமாக கட்டியணைக்க போகிறேன். நான் அவளை மிகவும் இழந்துவிட்டேன். அவள் மிகவும் தைரியசாலி. இங்கு தங்க வேண்டியிருப்பதாக கூறிய சமயம் பெரும் வேதனையடைந்தேன்.

என்ன நடக்கிறது என்று தெரியாமல் இருந்த என் வாழ்க்கையில் மிகவும் மோசமான மாதம் இதுதான் என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் பாரீஸிற்கு போன் செய்து, வீட்டிற்கு வரவுள்ளதாக அவருடைய தாய் தெரியப்படுத்தியுள்ளார். அதனை கேட்டதிலிருந்தே பாரிஸ் மகிழ்ச்சியின் உச்சத்தில் கதறி அழுதுகொண்டிருக்கிறாராம்.

இதனை விட ஒரு சிறப்பான நான் என்னுடைய வாழ்நாளில் இடம்பெறாது என பாரீஸ் தனியார் இதழுக்கு பேட்டியளித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்