பத்து வயது சிறுவனை கடித்துக் குதறி கொன்ற நாய்: பிரித்தானியாவில் பயங்கரம்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பயங்கர புல் டாக் வகை நாய் ஒன்று பிரித்தானிய சிறுவனைக் கடித்துக் குதறியதில் அவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.

Cornwallஇன் Tencreek விடுமுறை பார்க்கில் பேச்சு மூச்சற்றுக் கிடந்த அந்த சிறுவனைக் கண்டவர்கள் பொலிசாரிடம் புகாரளித்துள்ளனர்.

இன்று காலை அவசர உதவிக் குழுவினர் தகவலறிந்து வந்து பார்க்கும்போது அவன் சுயநினைவின்றிக் கிடந்துள்ளான்.

அவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

மூன்று மணி நேரத்திற்குப்பின், Salatash பகுதியில் இந்த சம்பவம் தொடர்பாக 28 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முரட்டு நாய்களை கட்டுப்பாட்டில் வைக்க தவறிய குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அந்த பெண் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

அந்த சிறுவனைக் கடித்த நாயும் கண்டுபிடிக்கப்பட்டு காப்பகம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ளது.

பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers