இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தில் பிரித்தானியாவைச் சேர்ந்த தாய் மற்றும் மகன் பலி..வெளியான புகைப்படம்

Report Print Santhan in பிரித்தானியா

இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் பிரித்தானியாவைச் சேர்ந்த தாய் மற்றும் மகன் பலியாகியிருப்பது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் நேற்று தொடர்ந்து அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தால் 290 பேர் பரிதாப பலியாகியுள்ளனர். 500 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குண்டு வெடிப்பு நடந்த கொழும்புவின் Shangri La ஹோட்டலில் தங்கியிருந்த பிரித்தானியா குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் பலியாகியுள்ளனர்.

இது குறித்து வெளியான தகவலில், பிரித்தானியாவைச் சேர்ந்த Ben Nicholson தன்னுடைய குடும்பத்தினருடன் விடுமுறையை கழிப்பதற்காக இலங்கை வந்திருந்த போது, Shangri La ஹோட்டலில் தங்கியுள்ளனர்.

அப்போது நடந்த வெடி குண்டு தாக்குதலில் Ben Nicholson-ன் மனைவி Anita(42) மற்றும் 11 வயது மகன் Alex Nicholson மோசமான காயங்களுடன் பலியாகியுள்ளனர். இளைய மகள் பற்றி எந்த ஒரு தகவலும் இல்லை.

மேலும் இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் Ben Nicholson சிறிய அளவிலான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்