கர்ப்பத்திலிருக்கும் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்த ஒரு அற்புத மருத்துவர்: இது அவர் செய்த இரண்டாவது அற்புதம்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

கர்ப்பத்திலிருக்கும் குழந்தையின் முதுகுத்தண்டில் ஏற்பட்ட ஒரு பிரச்சினையை தாயின் வயிற்றில் துளையிட்டு அறுவை சிகிச்சை மூலம் சரி செய்திருக்கிறார் ஒரு பிரித்தானிய மருத்துவர்.

முப்பது ஆண்டுகளுக்கு முன் ஒரு பெண், தனது கர்ப்பத்திலிருக்கும் குழந்தைக்கு இரத்தம் போதவில்லை என்ற பிரச்சினைக்காக Kypros Nicolaides என்ற இளம் மருத்துவரை சந்தித்தார்.

Kypros, அந்த பெண்ணின் தொப்புள் கொடி வழியாக இரத்தம் செலுத்தி அந்த குழந்தையை காப்பாற்றினார்.

அந்த கால கட்டத்தில் அது ஒரு அற்புதமாகவே கருதப்பட்டது. அந்த குழந்தையின் பெயர் Sherrie Sharp.

தற்போது 29 வயதாகும் Sherrie, தான் கர்ப்பமுற்று ஆறு மாதங்களானபோது, தனது வயிற்றிலிருக்கும் குழந்தையின் முதுகு தண்டில் ஒரு பெரிய பிரச்சினை இருப்பதை அறிந்தார்.

பல மருத்துவர்கள் அந்த குழந்தையை கருக்கலைப்பு செய்து விட ஆலோசனை கூறினபோது, Sherrieக்கு மருத்துவர் Kyprosஇன் ஞாபகம் வந்தது.

இம்முறையும் Kypros, Sherrieயை கைவிடவில்லை.

Sherrieயின் வயிற்றில் துளையிட்டு ஒரு கெமராவையும் அறுவை சிகிச்சை கருவிகளையும் அவரது கருப்பைக்குள் செலுத்தி மூன்று மணி நேர அறுவை சிகிச்சையில் Sherrieயின் குழந்தையின் பிரச்சினையை தனது குழுவினருடன் இணைந்து சரி செய்தார் மருத்துவர் Kypros.

ஆறு வாரங்களுக்குப்பின் Jaxson என்ற அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார் Sherrie. தற்போது நான்கு வாரக் குழந்தையாக இருக்கும் Jaxson ஆரோக்கியமாக இருக்கிறான்.

அவன் ஒரு அற்புதம் என்கிறார் Sherrie, பிறகென்ன, இரண்டு முறை Sherrieக்கு அற்புதம் நிகழ்த்திய அற்புத மருத்துவர் ஒருவர் கையால் உயிர் காக்கப்பட்ட அவன் நிச்சயம் அற்புதக் குழந்தையாகத்தானே இருக்க முடியும்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்