திடீரென பல கோடிகளுக்கு அதிபதியான இளைஞர்! டி.என்.ஏ பரிசோதனையில் வெளியான உண்மையால் அடித்த அதிர்ஷ்டம்

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் சாதாரண வேலையில் இருந்த நபர் டிஎன்ஏ பரிசோதனையின் மூலம் கோடீஸ்வரரின் மகன் என தெரியவந்துள்ள நிலையில் பல கோடி சொத்துக்களுக்கு அதிபதியாகியுள்ளார்.

ஹெல்ஸ்டன் நகரை சேர்ந்தவர் ஜோர்டன் அட்லார்ட் (31). இவர் பராமரிப்பு பணியாளராக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் கோடீஸ்வரர் சார்லஸ் ரோஜர்ஸ் (62) தனது தாய் மற்றும் சகோதரர் உடன் வசித்து வந்தார்.

ஜோர்டனுக்கு 8 வயதாக இருக்கும் போதிலிருந்தே சார்லஸுக்கும் தனக்கும் ஏதோ ஒரு இரத்த சொந்தம் இருக்கும் எனவும், அவர் தனது தந்தையாக கூட இருக்கலாம் எனவும் தோன்றியது.

பின்னர் 18 வயதான போது சார்லஸ் வீட்டுக்கு சென்ற ஜோர்டன் அவர் உதவியாளரிடம் இது குறித்து கூறினார்.

ஆனால் இதை அவர் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை, இதன்பின்னர் பலமுறை சார்லஸுக்கு ஜோர்டன் கடிதம் எழுதியும் அதற்கு பதில் வரவில்லை.

இந்நிலையில் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் டிஎன்ஏ பரிசோதனை செய்த ஜோர்டனுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. ஜோர்டன் நினைத்தது போல அவர் சார்லஸின் மகன் என தெரியவந்தது.

இது குறித்து சார்லஸிடம் கூறலாம் என உதவியாளரை தொடர்பு கொண்ட போது அவர் அதிர்ச்சியடைந்தார்.

காரணம் சார்லஸ் தனது காரில் இருந்த நிலையிலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இது குறித்த விசாரணையில் அதிகளவு போதை மருந்துகளை சாப்பிட்டதால் அவர் உயிரிழந்தார் என கூறப்பட்டது.

சார்லஸ் இறந்த சில வாரங்களிலேயே அவரின் தாய் மற்றும் சகோதரரும் உடல்நலக்குறைவால் இறந்தனர்.

இந்நிலையில் சார்லஸின் அனைத்து சொத்துக்களும் அவரின் அசல் வாரிசான ஜோர்டனுக்கு தற்போது கிடைத்துள்ளது.

சார்லஸின் எஸ்டேட் வீடு மட்டுமே 1536 ஏக்கரில் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது.

அவரின் மொத்த சொத்து மதிப்பான £50 மில்லியனுக்கு ஜோர்டன் சொந்தகாரராகியுள்ளார்.

இது குறித்து ஜோர்டன் கூறுகையில், டிஎன்ஏ பரிசோதனையில் சாதகமான முடிவு வந்தவுடன் என் வாழ்க்கையே மாறிவிட்டது.

ஆனால் நான் தான் சார்லஸின் வாரிசு என்பதை அறியாமலேயே அவர் இறந்துவிட்டார்.

இனி நான் வேலைக்கு செல்ல தேவையில்லை, தொண்டு நிறுவனம் ஒன்று தொடங்கி மக்களுக்கு உதவ போகிறேன், இது தான் இனி என் வாழ்நாள் லட்சியம் என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்