இலங்கை தொடர்பில் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பிரித்தானியா!

Report Print Arbin Arbin in பிரித்தானியா

இலங்கையில் ஈஸ்டர் தாக்குதலை அடுத்து சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை பிரித்தானியா தளர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறன்று ஐ.எஸ் ஆதரவு பயங்கரவாதிகளால் முன்னெடுக்கப்பட்ட தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 250 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து பிரித்தானியா, சுவிஸ், கனடா உள்ளிட்ட பல்வேறு நாட்டின் வெளிவிவகார அமைச்சகமானது அந்தந்த நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்தது.

இந்த நிலையில், தீவிரவாத அச்சுறுத்தல் தொடர்பான மறு ஆய்வுக்கு பின்னர் தற்போது பிரித்தானிய வெளிவிவகார அமைச்சகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில், பிரித்தானிய சுற்றுலா பயணிகள், தேவை இருப்பின் இலங்கைக்கு சென்றுவரலாம் என அறிவித்துள்ளது.

மேலும், தீவிரவாதிகள் வெளிநாட்டவர்களை குறிவைத்து தாக்குதல் முன்னெடுக்கலாம் எனவும், ஈஸ்டர் தாக்குதலையொட்டி கும்பல் தாக்குதலும் ஏற்படலாம் எனவும் எச்சரித்துள்ளனர்.

மட்டுமின்றி, தேவை கருதி இலங்கைக்கு செல்லும் பிரித்தானியர்கள் கண்டிப்பாக மிகுந்த எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் இருப்பது அவசியம் எனவும்,

தினசரி நகர்வுகளை கூர்ந்து கவனித்து முடிவெடுக்க வேண்டும் எனவும் அந்த அறிவிப்பில் எச்சரித்துள்ளனர்.

உள்ளூர் அதிகாரிகள் அளிக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் எனவும், கூட்ட நெரிசலில் சிக்க வேண்டாம் எனவும்,

பொதுக்கூட்டங்களில் எதுவும் கலந்துகொள்ள வேண்டாம் எனவும் பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers