இந்திய விமான நிலைய ஊழியர் முகத்தில் துப்பி அவமதித்த பிரித்தானிய பெண் வழக்கறிஞர் தற்கொலை?

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியாவைச் சேர்ந்த மனித உரிமைகள் வழக்கறிஞரான ஒரு பெண், இந்திய விமான ஊழியர்களை அவமதித்ததற்காக கைது செய்யப்பட்ட நிலையில், சிறையிலிருந்து வந்த இரண்டு வாரங்களுக்குள் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு, Hoveஐச் சேர்ந்த Simone Burns (50) மும்பையிருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஒன்றில் பயணிக்கும்போது, விமான ஊழியர்களை இன ரீதியாக விமர்சித்து அவமதித்ததற்காக, அவருக்கு ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

விமானம் புறப்பட்டு சில நிமிடங்களுக்குள் மூன்று பாட்டில் ஒயின் வழங்கப்பட்ட பின்னரும், மீண்டும் மதுபானம் கேட்டதால் விமான ஊழியர்கள் மறுத்த நிலையில், Simone அவர்களை கெட்ட வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

அத்துடன் தனக்கு மதுபானம் தர மறுத்த ஊழியர் முகத்தில் துப்பியுள்ள Simone, ஒரு சூப்பர்வைசரின் கையைப் பிடித்து முறுக்கியுள்ளார்.

விமான ஊழியர்களை மட்டுமின்றி, இந்தியர்களை மோசமான வார்த்தைகளால் விமர்சித்த Simone, தான் ஒரு சர்வதேச வழக்கறிஞர் என மிரட்டியதோடு, விமானியின் அறைக்குள் நுழைய முயன்றிருக்கிறார்.

விதிகளை மீறி சிகரெட் பிடித்துள்ளார். பல பயணிகள் முன்பு அநாகரீகமாக நடந்து கொண்டுள்ளார்.

எனவே அவர் மீது புகார் செய்யப்பட, லண்டனில் விமானம் தரையிறங்கியதும் Simone கைது செய்யப்பட்டார்.

விசரணைக்குப் பின் அவருக்கு ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. சமீபத்தில் சிறையிலிருந்து வெளியே வந்த Simone, இந்த மாதம் 1ஆம் திகதி Beachy Head என்னும் பகுதியில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.

அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கருதப்படும் நிலையில், தண்டனை விதிக்கப்பட்டதிலிருந்தே அவர் கடும் விமர்சனங்களுக்குள்ளானதால், மன ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டிருந்ததாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்