மூச்சில்லாமல் பிறந்த குழந்தை... பரபரப்பான மருத்துவர்கள்... கண்கலங்கிய தாய்! வீடியோ

Report Print Vijay Amburore in பிரித்தானியா
334Shares

இங்கிலாந்தில் மூச்சில்லாமல் பிறந்த குழந்தையை மருத்துவர்கள் போராடி காப்பாற்றும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இங்கிலாந்தை சேர்ந்த கணக்காளர் தஹ்மினா, அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட பிரசவ திகதி முடிந்து 10 நாட்களை கடந்தும் கூட குழந்தை பிறக்காததால் ஹார்லோவில் உள்ள இளவரசி அலெக்ஸாண்ட்ரா மருத்துவமனையில் பிறப்புக்கு முந்தைய வார்டில் 24 மணி நேரத்திற்கும் மேலாக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவரது நிலையை நினைத்து பெரிதும் கவலையடைந்த மருத்துவச்சி ஜோ மருத்துவரை அழைத்து பரிசோதனை மேற்கொண்ட போது, குழந்தை இயற்கையான வழியில் பிறப்பது மிகவும் கடினம் என கூறியுள்ளார்.

வீடியோவை காண...

இதனையடுத்து தஹ்மினா அவசரகால சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டார். அங்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட போது ஆபத்தான நிலையில் குறுக்கு வழியில் குழந்தை இருந்துள்ளது.

12 நிமிட அறுவை சிகிச்சைக்கு பின்னர் மருத்துவர்கள் குழந்தையை வெளியில் எடுத்தனர். ஆனால் குழந்தை மூச்சில்லாமல் இருப்பதை பார்த்து மருத்துவக்குழு அதிர்ச்சியடைந்துள்ளது.

விரைந்து செயல்பட்ட அவசர குழு குழந்தையை உயிர்ப்பிப்பதற்காக வேலைகளில் ஈடுபட ஆரம்பித்தனர். அடுத்த மூன்று நிமிடங்களில் குழந்தை சத்தமிட்டு அழ ஆரம்பித்தது. அங்கிருந்த அனைவரும் பெரும் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

பின்னர் மருத்துவச்சி ஜோ குழந்தையை கையில் எடுத்துக்கொண்டு தஹ்மினாவிடம் காண்பித்தார். தன்னுடைய குழந்தையை பார்த்ததும் தஹ்மினாவும் கண்கலங்க ஆரம்பித்துவிட்டார். நெஞ்சை உருக்கும் இந்த வீடியோ காட்சியினை பார்த்து, மருத்துவ குழுவை இணையதளவாசிகள் பாராட்டி வருகின்றனர்.

இதுகுறித்து தஹ்மினாவின் கணவர் கூறுகையில், அந்த மூன்று நிமிடம் எனக்கு மூன்று வருடங்கள் போல இருந்தது. நான் கடிகாரத்தையே பார்த்து கொண்டிருந்தேன். அப்போது தான் திடீரென குழந்தை அழும் சத்தம் கேட்டது. நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்