பிரித்தானியாவில் சரமாரி கத்திக்குத்து தாக்குதல்: சந்தேக நபர் சிக்கினார்

Report Print Basu in பிரித்தானியா

பிரித்தானியாவில் சரமாரி கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்டுத்தியுள்ளது.

பர்மிங்காம், Sparkhill பகுதியிலே பயங்கர கத்திக்குத்து தாக்குதல் நிடத்தப்பட்டுள்ளது. இதில், ஒருவர் கொல்லப்பட்டுள்ளார், மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், 3 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இத்தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தன்று இரவு 10.40 மணிக்கு 35 வயதான நபர் கடுமையான கத்திக் குத்து காயங்களால் கண்ட நபர் ஒருவர், பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

பயங்கரமாக குத்தப்பட்டு கிடந்த 37 வயதுடைய நபர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள 35 வயதான நபர் ஆபத்தான நிலையில் உள்ளார். மற்ற மூன்று ஆண்கள், 30 வயதிற்குட்பட்ட இருவர் மற்றும் 40 வயதில் ஒருவர் காயமடைந்துள்ளனர்.

சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள 32 வயதான நபரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாக West Midlands பொலிசார் தெரிவித்தனர். தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள் என்று பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து பொலிஸ் அதிகாரி கூறியதாவது:இந்த பிரச்சனையின் விளைவாக ஒரு நபர் சோகமாக இறந்துவிட்டார், மற்றவர்கள் காயமடைந்துள்ளனர்.

எல்லா ஆண்களும் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம், இந்த கட்டத்தில் மரணம் தொடர்பாக வேறு யாரையும் நாங்கள் தேடவில்லை.

இந்த பிரச்னைக்கு வழிவகுக்கும் சூழ்நிலைகள் பற்றிய விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்