பிரதமர் போரிஸை மன்னிப்பு கேட்கச் சொன்ன பிரித்தானியா சீக்கிய எம்.பி: வைரல் வீடியோ

Report Print Basu in பிரித்தானியா

பிரித்தானியாவின் மக்களவையில், கடந்த காலத்தில் கூறிய இனவெறி கருத்துக்களுக்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பிரித்தானியாவின் முதல் சீக்கிய எம்.பி தன்மஞ்சீத் சிங் தேசி கோரினார்.

சபையில் பிரதமரை கேள்விகளால் துளைத்த தன்மஞ்சீத் சிங் தேசி, சக எதிர்க்கட்சி தொழிற்கட்சி எம்.பி.க்களிடமிருந்து கைதட்டல்களைப் பெற்றார்.

சபையில் தேசி பேசியதாவது, எங்களைப் போன்றவர்க்ள சிறு வயதிலிருந்தே, towelhead அல்லது தலிபான் போன்ற பெயர்களால் அழைக்கப்படுவதை எதிர்கொண்டு சகித்துக் கொள்ள வேண்டியிருக்கும், அல்லது நாங்கள் மோசமான நிலத்திலிருந்து வந்தவர்கள் என்று சொல்வார்கள்.

ஏற்கனவே முஸ்லிம் பெண்கள் வங்கி கொள்ளையர்கள் மற்றும் லெட்டர்பாக்ஸைப் போல தோற்றமளிக்கிறார்கள் என பாதிக்கப்படக்கூடிய கருத்துகளால் நாம் உணர்ந்த வேதனையையும் வலியையும் முழுமையாகப் பாராட்டலாம் என ஜான்சன் எழுதிய கட்டுரையை குறிப்பிட்டார்.

எனவே, போலியான விசாரணைகளுக்குப் பின்னால் ஒளிந்து கொள்வதை விட, பிரதமர் தனது கேவலமான மற்றும் இனவெறி கருத்துக்களுக்கு எப்போது மன்னிப்பு கேட்பார்? அந்த இனவெறி கருத்துக்கள் வெறுக்கத்தக்க குற்றங்களை அதிகரிக்க வழிவகுத்தன என்று தேசி கூறினார்.

பிரித்தானியா பிரதமருக்கு தனது சொந்த கன்சர்வேடிவ் கட்சிக்குள் Islamophobia என்று கூறப்படும் விசாரணைக்கு உத்தரவிடுமாறு தேசி சவால் விடுத்தார்.

இதற்கு பதிலளித்த பிரதமர் போரிஸ் ஜான்சன்: நான் முஸ்லிம் முன்னோர்கள்களைக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல், தேசியைப் போன்ற சீக்கியர்களுடன் தொடர்புடையவனாகவும் பெருமைப்படுகிற ஒருவனாகப் பேசுகிறேன்.

இந்த அரசாங்கத்தின் கீழ், பிரித்தானியா வரலாற்றிலேயே எங்களிடம் மிகவும் மாறுபட்ட அமைச்சரவை உள்ளது. நவீன பிரித்தானியாவை நாங்கள் உண்மையிலேயே பிரதிபலிக்கிறோம் என கூறினார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்