2 மகன்கள் படுகொலை.. 4 குழந்தைகளை கொல்ல சதி திட்டம் தீட்டிய தாய் : நீதிமன்றத்தில் கண்ணீருடன் அளித்த வாக்குமூலம்

Report Print Basu in பிரித்தானியா

பிரித்தானியாவில் நீதிமன்ற விசாரணையின் போது, தனது இரண்டு மகன்களையும் கொன்றதை தாய் ஒப்புக்கொண்டு கண்ணீர் விட்டு கதறியுள்ளார்.

Sheffield பகுதியில் வசித்து வரும் 34 வயதான Sarah Barrass, தனது உறவினர் 37 வயதான Brandon Machin-வுடன் சேர்ந்து இரண்டு மகன்களையும் கொன்றுள்ளார்.

கடந்த மே மாதம் 24ம் திகதி Sheffield பகுதியில் உள்ள Barrass வீட்டிற்கு விரைந்த பொலிசார் Tristan, 13 மற்றும் Blake Barrass, 14 இருவரை பிணமாக மீட்டுள்ளனர்.

குறித்த வீட்டில் குழந்தைகளுக்கு என்ன நடந்தது, எப்படி இறந்தார்கள் என்ற தகவலை தற்போது வரை பொலிசார் வெளியிடவில்லை. கடந்த ஜூன் 4ம் திகதி வழக்கு தொடர்பாக நடந்த நீதிமன்ற விசாரணையின் போது, இருவரும் 12 நிமிட இடைவெளியில் கொல்லப்பட்டது தெரியவந்தது.

கொலை வழக்கு தொடர்பாக Sheffield Crown நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சிறுவர்களின் தாய் Barrass, தனது குடும்ப உறவினர் Brandon Machin-வுடன் சேர்ந்து குழந்தைகளை கொன்றதாக குற்றத்தை ஒப்புக்கொண்டு கண்ணீர் விட்டு கதறியுள்ளார்.

mirror.co.uk

Brandon Machin-னும் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், மீதமுள்ள நான்கு குழந்தைகளையும் கொல்ல சதிதிட்டம் திட்டியதையும் இருவரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி Jeremy Richardson QC கூறுகையில், நீங்கள் இருவரும் செய்த குற்றத்தை என்னுடைய எந்த வார்த்தைகளாலும் முழுமையாக பிரதிபலிக்க முடியாது.

இரண்டு குழந்தைகளின் கொலை, நான்கு குழந்தைகளை கொலை செய்ய முயன்றது மற்றும் அந்த குழந்தைகளை கொலை செய்வதற்கான சதித்திட்டம் ஆகிய குற்றங்கள் மிகவும் வெளிப்படையாக உங்களின் உணர்வுகளை விவரிக்கின்றன.

நான் மீண்டும் சொல்கிறேன், அந்தக் குற்றங்கள் உங்களின் உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன. உங்கள் ஒவ்வொருவருக்கும் தகுந்த பல ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை.

இருவருக்கும் நவம்பர் 12ம் திகதி தண்டனை அறிவிக்கப்படும் என நீதிபதி Jeremy Richardson QC கூறினார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்