கனவில் கால்கள் துண்டாக அகற்றப்படுவதாக நினைத்து கொண்ட பெண்! நினைவு திரும்பிய போது காத்திருந்த அதிர்ச்சி

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருந்த பெண்ணின் இரண்டு கால்களை மருத்துவர்கள் அகற்றியுள்ள சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

டினா மெக்கியூ (37) என்ற பெண் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார், இதோடு அவரின் ஒரு சிறுநீரகமும் செயலிழந்தது.

இந்நிலையில் டினாவுக்கு அவர் காதலருடன் விரைவில் திருமணம் நடக்க ஏற்பாடுகள் நடந்து வந்தது.

ஆனால் திடீரென உடல்நிலை டினாவுக்கு மோசமடைந்த நிலையில் அவர் கோமா நிலைக்கு சென்றார்.

இதையடுத்து டினாவின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்றால் அவர் கால்களை அகற்றியே ஆக வேண்டும் என முடிவெடுத்த மருத்துவர்கள் அதன்படி ஆப்ரேஷன் மூலம் கால்களை அகற்றினார்கள்.

இந்நிலையில் கோமாவில் இருந்து நினைவு திரும்பிய டினா தனது கால்கள் அகற்றப்பட்டதை அறிந்து துடித்து போனார்.

தற்போது மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் டினா கூறுகையில், எனக்கு கனவில் கால்கள் அகற்றப்பட்டது போல ஒரு உணர்வு ஏற்பட்டதாக முதலில் நினைத்தேன்.

ஆனால் கோமாவில் இருந்து நினைவுக்கு வந்த போது தான் அது கனவு இல்லை நிஜம் என்பது தெரிந்து அதிர்ச்சியடைந்தேன்.

எனக்கு உடலில் பெரியளவில் நோய் தொற்று ஏற்பட்டதால் நிச்சயம் கால்களை அகற்ற வேண்டும் என மருத்துவர்கள் முடிவு செய்து அதை செயல்படுத்தியுள்ளனர்.

இந்த மாதம் இறுதியில் நான் டிஸ்சார்ஜ் செய்யப்படுவேன் என நினைக்கிறேன்.

எனக்கு ஒரு ஆசை தான், என் திருமணத்தின் போது என் கணவருடன் மணமேடையில் ஒய்யாரமாக நடந்து செல்ல வேண்டும் என உருக்கமாக தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்