பிரித்தானியாவில் குழந்தைகள் மீது பயங்கரமாக மோதிய கார்... சிறுவன் பலி! நான்கு பேர் மருத்துவமனையில்?

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் பள்ளிக்கு அருகே கார் ஒன்று திடீரென்று குழந்தைகள் மீது மோதியதால், இந்த சம்பவம் காரணமாக 12 வயது சிறுவன் உயிரிழந்திருப்பதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரித்தானியாவின் எசக்ஸில் Loughton-வில் இருக்கும் Debden Park மேல்நிலை பள்ளிக்கு அருகே உள்ளூர் நேரப்படி இன்று மாலை 3.30 மணிக்கு திடீரென்று குழந்தைகள் மீது மோதியதால், உடனடியாக ஆம்புலசன்சிற்கு தெரிவிக்கப்பட்டது.

(Picture: BPM Media)

இந்த விபத்தின் போது, குழந்தை ஒன்றின் மிகவும் மோசமாக கார் மோதியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், பொலிசார் உடனடியாக குறித்த பகுதிக்கு விரைந்தனர்.

விபத்து நடந்த சாலை பகுதியை மூடியை பொலிசார், அந்த பகுதியினை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். மேலும் இது ஒரு மிகவும் மோசமான விபத்து என்று பொலிசார் கூறியுள்ளனர்.

ஆனால் எத்தனை பேருக்கு காயம்? என்பது குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகமல் இருந்த நிலையில், இந்த விபத்தின் காரணமாக 12 வயது சிறுவன் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் 15 வயது சிறுவன், 13 வயது சிறுவன், 16 வயது சிறுமி மற்றும் 53 வயது நபர் ஒருவரும் இதன் காரணமாக காயம் ஏற்பட்டிருப்பதாகவும், அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒன்றுக்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்களின் உயிருக்கு எந்த ஒரு ஆபத்தும் இல்லை.

அதே சமயம் இந்த விபத்தை ஏற்படுத்திய காரினை பொலிசார் பிடிக்க முயற்சித்தும், அது பலனிக்கவில்லை, பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Picture: BPM Media)

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்