பிரித்தானியாவில் உயிருக்கு அச்சுறுத்தல் மிகுந்த பகுதி எது? பொலிசார் வெளியிட்ட பட்டியல்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவில் குற்றவியல் நடவடிக்கைகள் மிகுந்த பகுதி எதுவென்ற பட்டியலை பொலிஸ் தரப்பு வெளியிட்டுள்ளது.

இங்கிலாந்தின் வட பகுதியிலேயே குற்றச் செயல்கள் மிகுந்து காணப்படுவதாக குறித்த பட்டியல் வாயிலாக தெரியவந்துள்ளது.

கடந்த ஜூன் வரையான 12 மாதங்களில் மேற்கு யார்க்ஷயர் பகுதியில் 1000 பேருக்கு 128 குற்றங்கள் நடந்துள்ளன.

லண்டன் நகரமானது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஓராண்டில் மட்டும் 146 பேர் தெருக்களில் கொல்லப்பட்டுள்ளனர்.

மட்டுமின்றி லண்டனில் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களும் கடந்த ஓராண்டில் மிகுந்து காணப்பட்டதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளன.

க்ளீவ்லேன்ட், கிரேட்டர் மான்செஸ்டர், ஹம்ப்சைட், லங்காஷயர், நார்த்ம்ப்ரியா, சவுத் யார்க்ஷயர் மற்றும் டர்ஹாம் ஆகிய பகுதிகள் நாட்டின் மிகவும் குற்றங்கள் நிறைந்த பகுதிகள் என தரவுகள் தெரிவிக்கின்றன.

முதல் பத்து இடங்களில் உள்ள ஒரே தெற்குப் பகுதி கென்ட், இங்கு 1,000 பேருக்கு 106 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஆனால் கென்ட் பகுதியானது கொலை மற்றும் தாக்குதல்கள் போன்ற வன்முறைக் குற்றங்களில் இரண்டாவது மிக உயர்ந்த மட்டத்தைக் கொண்டுள்ளது.

திருட்டு மற்றும் மோசடி போன்ற வன்முறையற்ற குற்றங்கள் உட்பட 12 மாதங்களில் 6.02 மில்லியன் குற்றங்கள் பிரித்தானியாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்