குடிபோதையில் விமானத்தில் ஆபாசமாக நடந்துகொண்ட இளம்பெண்ணுக்கு சிறை!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

குடிபோதையில் விமானத்தில் ஆபாசமாக நடந்துகொண்ட இளம்பெண் ஒருவருக்கு ஆறுமாதங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

அபுதாபியிலிருந்து மான்செஸ்டர் செல்லும் விமானப்பயணியாகிய Demi Burton (20), குடிபோதையில், தன்னுடன் பாலுறவு கொள்ள வருமாறு ஆண்களை அழைத்துள்ளார்.

அத்துடன் அவருக்கு அதிக மதுபானம் கொடுக்க மறுக்கப்பட்டபோது விமானத்தை தரையிறக்குமாறு கத்தி கலாட்டா செய்துள்ளார்.

அவரை சமாதானப்படுத்த முயன்ற விமான ஊழியர்களை தலையால் முட்டித்தள்ளியதோடு, பலமாக உதைத்திருக்கிறார்.

அவரை கட்டுப்படுத்த முயன்ற விமானத்தில் பயணித்த மருத்துவர் ஒருவருக்கும், விமானப் பணிப்பெண் ஒருவருக்கும் கடி விழுந்துள்ளது.

கடைசியில் ஆறுபேர் சேர்ந்து Demiயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர, விமானம் தரையிறங்கியதும் அவர் கைது செய்யப்பட்டார்.

விசாரணையில், தனக்கு விமானத்தில் பறக்க பயம் என்பதால் மது அருந்தியதாக அவர் மான்செஸ்டரிலுள்ள நீதிமன்றம் ஒன்றில் தெரிவித்தார்.

அவருக்கு ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...