இளவரசர் ஹரியும், மேகனும் விவாகரத்தாகி பிரிவார்கள்! பந்தயம் கட்டுபவர்கள் கணிப்பு.. வெளியான முழு தகவல்

Report Print Raju Raju in பிரித்தானியா
655Shares

பிரித்தானிய இளவரசர் ஹரியும், மேகனும் அடுத்த 5 ஆண்டுகளில் விவாகரத்து செய்து பிரியலாம் என பந்தயம் கட்டுபவர்கள் கணித்துள்ளார்கள்.

பிரித்தானிய அரச குடும்பத்தின் முதன்மை உறுப்பினர்கள் பதவியில் இருந்து விலகுவதாக இளவரசர் ஹரி-மேகன் அறிவித்துள்ளனர்.

தம்பதியின் இந்த அறிவிப்புக்கு ஒப்புதல் அளித்து மகாராணியார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதை தொடர்ந்து தனியாக சென்று வாழ இளவரசர் ஹரியும், மேகனும் முடிவெடுத்துள்ளனர்.

கனடாவுக்கு இருவரும் குடிபெயர விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது, ஆனால் இது உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பில் பந்தயம் கட்டுபவர்கள் முனைப்பு காட்டியுள்ளனர்.

அதாவது அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஹரி - மேகன் தம்பதி விவாகரத்து பெற்று பிரியலாம் என பந்தயம் கட்டுபவர்கள் கணித்துள்ளனர்.

அதன்படி ஹரி - மேகன் தம்பதி மீண்டும் அரச குடும்பத்தில் இணைவதை காட்டிலும், விவாகரத்து பெறவே அதிக வாய்ப்புள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் நிதி விடயத்தில் யாரையும் எதிர்பார்க்காமல் சுதந்திரமாக செயல்படும் நிலையில் இருவரும் இருப்பார்கள் எனவும் ஒரு சாரார் கணித்துள்ளனர்.

இன்னொரு பிரிவினரோ ஹரியும், மேகனும் நிரந்திரமாக வடக்கு அமெரிக்காவில் குடியேறலாம் என தெரிவித்துள்ளனர்.

இதில் £100 பந்தயம் வைக்கப்பட்டு, அப்படி ஹரி - மேகன் மீண்டும் அரச குடும்பத்துடன் இணைந்தால் £1,500 பணம் திரும்ப கிடைக்கும் வகையில் பந்தயம் உள்ளது.

மேலும் £100 பந்தயம் வைக்கப்பட்டு, தம்பதிகள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் விவாகரத்து பெற்றால் £400 பணம் கிடைக்கும் வகையில் பந்தயம் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்