வாடிக்கையாளர் அளித்த பணத்தில் கொரோனா தொற்று: பரிதாபமாக பலியான பிரித்தானிய டாக்ஸி சாரதி

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவில் வாடகை டாக்ஸி சாரதி ஒருவர் கொரோனாவால் இறந்ததன் காரணம், வாடிக்கையாளர் ஒருவர் அளித்த பணத்தாளாக இருக்கலாம் என அவரது மகள் தெரிவித்துள்ளார்.

தலைநகர் லண்டனில் வாடகை டாக்ஸி சாரதியாக பணியாற்றி வந்தவர் 55 வயதான Spencer Kurash. திடீரென்று கொரோனாவால் இவர் இறந்த நிலையில்,

தமது தந்தை வாடிக்கையாளர் ஒருவர் அளித்த பணத்தால் நோய்த்தொற்றுக்கு இலக்காகி இருக்கலாம் என அவரது 18 வயது மகள் நடாஷா தெரிவித்துள்ளார்.

22 ஆண்டுகள் டாக்ஸி சாரதியாக பணியாற்றி வந்துள்ள ஸ்பென்ஸர், மார்ச் 18 ஆம் திகதி இரவு கொரோனா அறிகுறிகளுடன் காணப்பட்டார்.

தொடர்ந்து அவரால் தாக்குப்பிடிக்க முடியாமல் போகவே அவசர உதவிக்கு அழைத்துள்ளனர். அவசர மருத்துவ உதவிக்குழுவினர் போராடியும் அவரை காப்பாற்ற முடியாமல் போனது.

இதனிடையே மருத்துவ பரிசோதனை முடிவுகள் ஸ்பென்ஸருக்கு கொரோனா பாதிப்பை உறுதி செய்தன.

இருப்பினும், ஸ்பென்ஸர் லண்டனின் எந்த பகுதியில் இருந்து பெற்ற பணத்தால் நோய்த்தொற்றுக்கு இலக்கானார் என்பது மர்மமாகவே உள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்