இரவு விடுதிக்கு சென்றதால் போதையின் தாக்கத்தில் இருப்பதாக எண்ணிய இளம்பெண்... அவருக்கு காத்திருந்த பயங்கர அதிர்ச்சி!

Report Print Balamanuvelan in பிரித்தானியா
660Shares

இரவு விடுதிக்கு சென்று திரும்பிய இளம்பெண் ஒருவர், தான் போதையின் தாக்கத்திலிருந்து விடுபடவில்லை என்று எண்ணிக்கொண்டிருந்த நிலையில், உண்மை தெரியவந்தபோது அதிர்ச்சியில் உறைந்துபோனார்.

நாட்டிங்காமைச் சேர்ந்த Rachael Bailey (19) ஒரு மாணவியாக இருந்தபோது, இரவு விடுதி ஒன்றுக்கு சென்றுள்ளார்.

மதுபானம் அருந்திவிட்டு வெகுநேரம் நடனமாடியபின், தனது பாதத்தில் கிச்சுகிச்சு மூட்டுவது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டுள்ளது அவருக்கு.

ஒருவேளை தனது புதிய ஹீல்ஸ் செருப்பால் அப்படி ஆகியிருக்கலாம் என்று எண்ணிக்கொண்டார் Rachael.

ஆனால், மறுநாள் காலை வரை அந்த உணர்வு நீடித்ததோடு, முதுகு வலியும் சேர்ந்துகொள்ள, அப்போதும், நாம் நேற்று வெகுநேரம் நடனமாடியதால் அப்படி இருக்கிறது என்று தன்னையே சமாதானம் செய்துகொண்டார் Rachael.

அனால் மறுநாள் அதே உணர்வு நீடித்ததோடு, தனது கால்களை அசைக்க முடியவில்லை என்பது தெரியவந்தபோது பயம் வந்துவிட்டது அவருக்கு.

ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட Rachaelஐ மருத்துவர்கள் பரிசோதித்தபோது, இலட்சத்தில் ஒருவரைத் தாக்கும் ஒரு அபூர்வ நோய் தன்னை தாக்கியிருப்பது தெரியவந்தபோது அதிர்ச்சியில் உறைந்துபோனார் அவர்.

மூன்று நாட்களில் நிலைமை மோசமாக வெண்டிலேட்டருடன் இணைக்கப்பட்டு, பின் கோமா நிலைக்கு கொண்டு செல்லப்பட்டார் அவர்.

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு பேச்சு, மூச்சு, நடை என அனைத்து செயல்பாடுகளையும் இழந்து, கண்களால் மட்டும் உணர்வுகளை வெளிப்படுத்தும் நிலைக்கு சென்ற Rachael, 59 நாட்கள் மருத்துவமனையிலும், 76 நாட்கள் புனர்வாழ்வு மையத்திலும் செலவிட்டபின், ஐந்து மாதங்களுக்குப் பிறகு தன் சொந்தக்கால்களால் வீட்டுக்கு நடந்து சென்றார்.

குற்றவியல் மற்றும் மனோதத்துவம் கற்கவேண்டும் என்ற இலட்சியம் வைத்திருந்த Rachaelஐ, மருத்துவமனை முற்றிலும் மாற்றியிருந்தது.

பிசியோதெரபி கற்கவேண்டும் என்ற ஆசையை ஏற்படுத்தியிருந்தனர் Rachaelக்கு சிகிச்சை அளித்து பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த அவரை நடக்க வைத்த பிசியோதெரபிஸ்டுகள்.

இன்று, அந்த பிசியோதெரபிஸ்ட் ஒருவரிடமே பாடம் பயின்று, பிசியோதெரபியில் முதல் வகுப்பில் பட்டம் பெற்றுள்ளார் Rachael.

பிசியோதெரபி என்றால் கால்பந்தாட்டக்காரர்கள் விளையாடும்போது கீழே விழுந்துவிட்டால் மசாஜ் செய்யும் வேலை என்று முன்பு நினைத்திருந்தேன், ஆனால் பிசியோதெரபிஸ்டுகள் செய்த மாஜிக்கால்தான் இன்று நான் மீண்டும் நடக்கிறேன் என்கிறார் Rachael.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்