அன்று வடகொரியாவில் இருந்து தப்பித்து பிரித்தானியாவிற்கு வந்த பெண்: இன்று எப்படி இருக்கிறார் தெரியுமா?

Report Print Santhan in பிரித்தானியா
1396Shares

வடகொரியாவில் இருந்து இரண்டு முறை தப்பிக்க முயன்று, தற்போது பிரித்தானியாவில் தன் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து வரும் 52 வயது மதிக்கத்தக்க பெண், அங்கிருந்து இங்கு வருவதற்குள் தான் அனுபவித்த வேதனைகள் குறித்து கூறியுள்ளார்.

பொதுவாகவே வடகொரியா என்றால் ஒரு மர்மம் நிறைந்த நாடு, அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் ஒரு சர்வாதிகாரி என்று கேள்விபட்டதுண்டு, அந்தளவிற்கு அந்நாட்டு மக்களை, கிம் ஜாங் உன் தலைமையிலான அரசு அச்சுறுத்தி வைத்திருக்கிறது.

(Image: KCNA VIA KNS/AFP via Getty Image)

இந்நிலையில், பிரித்தானியாவின் மான்செஸ்டரின் Bury-யில் வசித்து வருபவர் தான் Jihyun Park, 52 வயது பெண்ணான இவர், வடகொரியாவின் அந்த கொலைகார ஆட்சியில் இருந்து தப்பி, சீனாவில் அடிமையாகி, அதன் ஒரு மகனைப் பெற்றெடுத்து சிறைபிடிக்கப்பட்டு, அதன் பின் அங்கிருந்து எப்படி தப்பி வந்தேன் என்று கூறியுள்ளார்.

அதில், வடகொரியாவில் எனக்கு முன்னால் பலர் பட்டினியால் இறப்பதை நான் கண்டேன், இதில் என் அப்பாவும், மாமாவும் பட்டினியால் இறந்தனர்.

நாட்டின் கடலோர நகரமான Chongjin நகரை சேர்ந்த திருமதி Jihyun Park 1998-ஆம் ஆண்டு தான் முதன் முதலில் வடகொரியாவில் இருந்து தப்பி முயன்றார். ஏனெனில், அங்கு அப்போது பட்டினியால் மக்கள் கண் முன்னே இறந்து கொண்டிருக்கிறார்கள்.

Jihyun Park

இதனால் தம்பியை காப்பாற்ற வேண்டும் என்று அவரின் தந்தை இவரிடம் கூறியுள்ளார். இதையடுத்து தம்பியுடன் சேர்ந்து தந்தையை அங்கே விட்டுவிட்டு Onsong-ல் உறைந்த டுமென் ஆற்றின் குறுக்கே சீனாவிற்கு நடந்து சென்றுள்ளனர்.

அப்போது அங்கு நடந்த மனித கடத்தலின் போது, Park சீன விவசாயி ஒருவரிடம் 5,000 யுவானுக்கு விற்கப்பட்டார். இதையடுத்து அவர் அங்கிருக்கும் அவரின் குடும்பத்தினரால் வன்கொடுமை செய்யப்பட்டார்.

அப்படி இல்லை என்றால் மீண்டும் வடகொரியாவிற்கு அனுப்பிவிடுவோம் என்று மிரட்டப்பட்டது.

(Image: Amnesty International)

சீனாவிற்கு தப்பிச் செல்லும் பல வட கொரிய பெண்கள் அங்கு, பாலியல் அடிமைகளாகவும், வீட்டுப் பணியாளர்களாகவும் வற்புறுத்தப்படுகிறார்கள்.

மீண்டும் வடகொரியாவிற்கு திரும்பினார், நாட்டை விட்டு ஓடிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்துவிடுவார்கள் என்ற பயத்தினால், பெண்கள் அவர்களின் துன்புறுத்தல்களை எல்லாம் தாங்கி வாழ்ந்து வருகின்றனர்.

இதில் அவரது சகோதரர் பிடிபட்டுவிட்டதால், வடகொரியாவிற்கு அனுப்பப்பட்டுள்ளார். ஆனால் அவர் உயிர் பிழைத்தாரா? இல்லையா? என்பது இதுவரை Park-க்கு தெரியவில்லை. இவருடைய குடும்ப உறுப்பினர்கள், அம்மா மூத்த சகோதரி என பலரும் காணமல் போய்விட்டனர்.

சீனாவில் அடிமைப்படுத்தப்பட்டு, வன்கொடுமை செய்யப்பட்டதன் காரனமாக Park மகனை பெற்றெடுத்துள்ளார். அந்த மகனுக்கு சோல் என்று பெயர் வைத்துள்ளார்.

அதன் பின் மகன் இல்லாமல் இவ்வளவு கொடுமைகளை தாங்கிய நிலையிலும், 2004-ஆம் ஆண்டு வடகொரியாவிற்கு Park திருப்பி அனுப்பப்பட்டார்.

சீனர்கள் இவர்களை பாலியல் பொம்மைகளாகவே மட்டுமே பார்த்துள்ளனர். ஒரு அகதியாக ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் மீண்டும் வடகொரியாவிற்கு திரும்பிய இவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

(Image: Fuji TV)

அங்கு, கைகளை மட்டுமே பயன்படுத்தி நாள் முழுவதும் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர், பட்டினியால் வாடப்பட்ட கைதிகள் உயிர்வாழ எலிகளை சாப்பிட வேண்டிய நிலை இருந்துள்ளது.

அங்கிருந்தவர்க இவர்களை மனிதர்களாக மதிக்க கூட இல்லை, காலணி இல்லாமல் அங்கிருக்கும் மலைகளில் நடக்கும் போது, மிகவும் கடினமான கஷ்டங்களை Park அனுபவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி போதுமான உணவு அடிபட்டால் மருந்தோ, பொது கழிப்பறையோ என்று எதுவும் அந்தளவிற்கு இருக்காது.

அங்கிருக்கும் காவல்துறையினரின் முன்னே கழிப்பறையை இவர்கள் பயன்படுத்தியுள்ளனர். இரத்தம் வந்தால், அதை கழுவுவதற்கு சரியான தண்ணீர் கூட கிடைக்காது.

இது மிகவும் அருவருப்பானது. எங்கள் உடலில் பேன் மற்றும் தலைகளில் பேன்கள் இருந்தன. இப்படி ஆறு மாதங்கள் சிறையில் கழித்து கொண்டிருந்த போது Park தன்னுடை மகனை பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது.

(Image: DigitalGlobe/Getty Images)

அதற்கு ஏற்ற வகையில், அவருடைய காலில் பலத்த காயம் ஏற்பட்டதால், இரண்டாவது முறையாக வடகொரியாவில் இருந்து தப்புவதற்கு இது சரியான வாய்ப்பு என்று எண்ணியுள்ளார்.

கால் வீங்கியதால் அவளால் நடக்க முடியவில்லை. காவலர்கள் அவளைப் பார்த்து, அவள் கிட்டத்தட்ட இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

ஆனால் சிறைக்குள் இறக்க கூடாது என்பதற்காக, ஒரு அனாதை இல்லத்திற்கு Park மாற்றப்பட்டார், அங்கு அவர் குணமடையத் தொடங்கினார்.

இருப்பினும், காவலர்கள் தொடர்ந்து அவளை பரிசோதித்து, அவரது நிலை மேம்பட்டால், அவர் மீண்டும் சிறைக்கு அனுப்பப்படுவார் என்று கூறினார்.

மூன்று மாதங்களுக்குப் பிறகு, அவள் மீண்டும் நடக்க முடியும் என்ற நிலையை அடைந்தார். ஆனால் மீண்டும் சிறைக்கு சென்றால் இறந்துவிடுவோம் என்று, கடந்த 2004-ஆம் ஆண்டு, வடகொரிய தரகரின் உதவியுடன் வடகொரியா எல்லையை தாண்டியுள்ளார்.

(Image: Daily Mirror)

காலில் அந்தளவிற்கு காயம் இருந்த போதும் சுமார் 24 மணி நேரம் கழித்து தாங்கள் செல்ல வேண்டிய இலக்கை அடைந்தார். அப்போது அவர் அந்த தரகர் இவரை விற்க முயன்றுள்ளார்.

ஆனால், ஒரு கட்டத்தில் தரகரின் உயிரை இவர் காப்பாற்ற, தரகர் அந்த முடிவை மாற்றியுள்ளார். அதன் பின் அவரிடம் சீனாவில் தனக்கு நடந்த கஷ்டங்களை கூறி, மகனை எப்படியாவது பார்க்க உதவும் படியும், மகனை அழைக்கும் படியும் கெஞ்சியுள்ளார்.

அதன் பின் ஒரு வழியாக மகனை பார்க்கும் போது இவர் அதிர்ச்சியடைந்தார். ஏனெனில் மகனின் உடைகள் கழுவப்படவில்லை, ஒரு நாள் கூட பள்ளிக்கு அனுப்பப்படவில்லை, சீன அரசாங்கத்திடம் இருந்து எந்த் ஒரு அடையாளமும் அவனுக்கு கிடைக்கவில்லை, புறக்கணிக்கப்பட்டதை அறிந்தார்.

இரண்டு முறை வடகொரியாவில் இருந்து தப்பிய அவர், தனது மகனுடன் சீனாவில் இருந்து வெளியேறுவதற்கு ஒரு வழியை கண்டுபிடிக்க முயன்றார். அதன் படி 2005-ஆம் ஆண்டு மங்கோலியாவிற்கு நுழைந்த போது, அங்கிருந்த நபர் எல்லையில் பாதுகாப்பு வேலியை அளவிடும் நபரிடம் காதல் வசப்பட்டுள்ளார்,

அவர் தான் இவரையும், இவர் மகனையும் காப்பாற்றியுள்ளார். தாகமாகவும், பசியுடனும், குளிராகவும் பாலைவனத்தில் சுற்றித் திரிந்த மூன்று நாட்களுக்குப் பிறகு, அவர்கள் சீனாவுக்குத் திரும்ப வேண்டும் என்று முடிவு செய்தனர்.

2007 ஆம் ஆண்டில், அவர் ஒரு கொரிய-அமெரிக்க போதகரைச் சந்தித்தார், அவர் ஐ.நா. அதிகாரிகளுக்கு ஒரு அகதியாக மாற அறிமுகப்படுத்தினார்

இது என் வாழ்க்கையில் ஐக்கிய நாடுகள் சபையைப் பற்றி நான் கேள்விப்பட்ட முதல் முறைய என்று Park கூறினார்.

மேலும், அவர் அரசியல் பிரச்சினைகள் காரணமாக தென் கொரிய மற்றும் அமெரிக்க பயணங்கள் ஆபத்தானவை என்று எனக்குத் தெரியும்.

நான் என் மகனைக் காப்பாற்ற விரும்பினேன், அதனால் தான் நான் பிரித்தானியாவை தெரிவு செய்தேன். நாங்கள் வட

வட கொரியாவும், பிரித்தானியாவும் நாடுகள் அல்ல.

Ms Park (Image: Jihyun Park)

வட கொரியாவில், அவர்கள் ஒருபோதும் யுனைடெட் கிங்டம் அல்லது பிரிட்டன் என்று சொல்ல மாட்டார்கள், இங்கிலாந்து என்று மட்டுமே கூறுவார்கள்.

இது மிகவும் காதல் நிறைந்த நாடு என்று எனக்குத் தெரியும். எனது கணவர் மற்றும் மகனுக்கு புகலிடம் வழங்கப்பட்டது. 2008-ஆம் ஆண்டு ஹீத்ரோ விமான நிலையத்திற்கு எந்த ஒரு ஆங்கிலமும் தெரியாமல் வந்திறங்கினோம்.

பல மக்கள் இருந்ததால் நான் அதிர்ச்சியடைந்தேன், ஏனெனில், வட கொரியாவில்வட கொரிய மக்கள் மட்டுமே, ஆனால் இங்கே உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் ஒன்றாக வாழ்கின்றனர்.

வட கொரியாவில் செய்தித்தாள்கள் சர்வாதிகாரியாக இருப்பதால் செய்தித்தாள்களை எல்லாம் பார்த்த போதும் அதிர்ச்சியாக இருந்தது. இங்கு அனைவரும் சமம், ஒரே குரல் என்பது எனக்கு புரிந்தது.

எங்களுக்கு சபை மற்றும் பல ஏஜென்சிகள் ஆதரவு அளித்தன, ஆங்கிலம் கற்றது மற்றும் வேலை கிடைத்தது.

எங்களுக்கு இரண்டு குழந்தைகள் இருந்தனர், முதல் மகன் இப்போது 21 வயதாகி லண்டனில் கணக்கியல் மற்றும் நிதி படித்து வருகிறார்.

நான் இந்த நாட்டை நேசிக்கிறேன், நான் மக்களை நேசிக்கிறேன். ஒவ்வொரு நாளும் நானும் என் கணவரும் ஐக்கிய இராச்சியம் மற்றும் மக்கள் மற்றும் அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிக்கிறோம், அவர்கள் எங்களை ஏற்றுக்கொண்டு எங்களுக்கு புதிய வாய்ப்புகளையும் புதிய வாழ்க்கையையும் கொடுத்தார்கள்.

பிரித்தானியாவில் உள்ள வட கொரிய சமூகம் பெரும்பாலும் ரேடரின் கீழ் செல்கிறது. தென்மேற்கு லண்டனில் உள்ள நியூ மால்டனில் மிகப்பெரிய சமூகம் உள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் கிம் ஜாங்-உன் பல வாரங்களாக பொது பார்வையில் இருந்து காணாமல் போனபோது, ​​அவர் மோசமான நோய்வாய்ப்பட்டவர், இறந்தவர் அல்லது கொரோனா வைரஸ் தொற்றுநோயால் தலைமறைவாக இருக்கக்கூடும் என்ற ஊகங்களுக்கு மத்தியில் அவர் இறந்துவிட்டார் என்ற செய்தி மகிழ்ச்சியாக இருந்தது என்று கூறினார்.

வடகொரியாவில் கொரோனா வழக்கு பூஜ்ஜியம் என்பதை Park நம்பவில்லை, வடகொரியாவில் உண்மையிலே என்ன நட்ககிறது என்பது யாருக்கும் தெரியாது.

(Image: Jihyun Park)

நாமும் மனிதர்கள், அவர்களைப் பற்றி சிந்தியுங்கள். தயவுசெய்து நினைவில் கொள்ளுங்கள் 25 மில்லியன் மக்கள் எப்போதும் ஒரு சர்வாதிகாரியின் கீழ் வாழ்ந்தவர்கள், அவர்களுக்கு சுதந்திரம் அல்லது வாழ்க்கையின் அர்த்தம் தெரியாது என்று முடித்துள்ளார்.

மேலும், தற்போது தங்கள் நாட்டை கைவிட்டு வந்தவர்களுக்கு உதவி செய்து வரும் Park-கிற்கு, கடந்த பிப்ரவரியில் Amnesty International bravery விருது கொடுக்கப்பட்டுள்ளது நினைவுகூரத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்