நாயுடன் வாக்கிங் சென்ற பெண் மீது மோதிய கார்... காரிலிருந்தவர்கள் அடுத்து செய்த மோசமான செயல்: கமெராவில் சிக்கிய காட்சி!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியாவில் நாயை கூட்டிக்கொண்டு வாக்கிங் சென்ற ஒரு பெண் மீது கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று மோதிய நிலையில், மோதிய காரிலிருந்தவர்கள் செய்த மோசமான செயல் கமெராவில் சிக்கியுள்ளது.

பர்மிங்காமிலுள்ள சாலை ஒன்றில் ஒரு பெண் நாயுடன் பாக்கிங் சென்று கொண்டிருந்திருக்கிறார்.

அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து அந்த பெண் மீது அவரது நாய் மீதும் மோதியுள்ளது.

இதில், அந்த பெண்ணின் கால் உடைந்ததுடன், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அந்த பரிதாபத்திற்குரிய நாய், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டது.

இதற்கிடையில், அந்த பெண்ணையும் நாயையும் மோதிய காரிலிருந்து இறங்கும் மூவர், எந்த பெண்ணுக்கு எந்த உதவியும் செய்ய முயற்சிக்காமல், அவர்களை அங்கேயே விட்டுவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டார்கள்.

இந்த சம்பவம், அந்த பகுதியிலுள்ள CCTV கமெரா ஒன்றில் பதிவாகியுள்ளது. தற்போது பொலிசார் அந்த வீடியோவை வெளியிட்டு, கார் மோதிய காரிலிருந்தவர்களை தேடி வருகிறார்கள்.

வெளியிடப்பட்டுள்ள அந்த வீடியோவில், தனக்கு நடக்கப்போகும் விபத்தைக் குறித்து அறியாமல் அந்த பெண் நாயுடன் நடப்பதைக் காணமுடிகிறது.

அப்போது, ஒரு கார் அவரை வேகமாக கடந்து செல்ல, அடுத்து வரும் மற்றொரு கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, அந்த பெண் மீதும், நாய் மீதும் மோதுகிறது.

அந்த பெண்ணும் நாயும் புதர்களுக்கிடையில் தள்ளிக்கொண்டு செல்லப்பட, காரிலிருந்து முதலில் இருவரும், பிறகு ஒருவருமாக மொத்தம் மூவர் இறங்கி ஓடுவதையும் அந்த வீடியோவில் காண முடிகிறது.

இதற்கிடையில், மோதிய காருக்கு முன்னால் சென்ற காரும் திடீரென பிரேக் போட்டு நடு ரோட்டில் நிற்க, அதிலிருந்து இறங்கும் சிலர் திரும்பி இந்த விபத்தைக் கண்டு அதிர்ச்சியடைவதையும் காண முடிகிறது.

ஆகவே, அந்த காரிலிருந்தவர்களும், மோதிய காரிலிருந்தவர்களும் ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்களாகத்தான் இருக்க முடியும் என கருதும் பொலிசார், அந்த காரையும் தேடி வருகிறார்கள்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்