லண்டன் பேருந்தில் பெண்கள், சிறுமிகள் முன்னால் அருவருப்பான செயலை செய்த இளைஞன்! நீதிமன்றம் அளித்த தண்டனை

Report Print Raju Raju in பிரித்தானியா

லண்டன் பேருந்தில் பெண்கள் மற்றும் சிறுவர், சிறுமிகள் எதிரில் பாலியல் செயல்களில் ஈடுபட்ட இளைஞனுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தெற்கு லண்டனில் தான் இந்த சம்பவம் கடந்த மே மாதம் நடந்துள்ளது.

Bobby Garande (27) என்ற இளைஞன் பேருந்தில் ஏறி உட்கார்ந்தார். பின்னர் இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு சிறார்கள் பேருந்தில் ஏறிய நிலையில் Bobby Garandeக்கு எதிர் இருக்கையில் அமர்ந்தனர்.

இதை தொடர்ந்து மற்றொரு பெண் பேருந்தில் ஏறி Bobby Garande அருகில் அமர்ந்தார்.

இதன்பின்னர் தனது உடைகள் மீது கை வைத்து பாலியல் ரீதியான தவறான செயல்களை Bobby Garande செய்துவிட்டு பேருந்தில் இருந்து இறங்கி சென்றுள்ளார்.

இது குறித்த புகாரின் பேரில் பொலிசார் அவரை கைது செய்தனர்.

Bobby Garande மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் அவருக்கு 16 வாரங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இதோடு அடுத்த அறிவிப்பு வரை குற்றவியல் நடத்தை ஆணையும் வழங்கப்பட்டது.

இதனிடையில் ரிமாண்டில் இருக்கும் போதே குறித்த சிறை தண்டனையை Bobby Garande அனுபவித்துவிட்டார் என தெரியவந்துள்ளது.

இந்த வழக்கில் குற்றவாளி சிக்குவதற்கு சிசிடிவி காட்சிகள் முக்கிய கருவியாக இருந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்