இங்கிலாந்தில் வெளிநாட்டு எண்ணெய்க் கப்பலை கடத்த முயன்ற கும்பல்? வெளிவரும் அதிர்ச்சி தகவல்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

நைஜீரியா நாட்டில் இருந்து சவுத்தாம்ப்டன் நகருக்கு வந்த எண்ணெய்க் கப்பலில் திருட்டுத்தனமாக 7 பேர் கொண்ட கும்பல் பயணம் செய்துள்ளதை கண்டறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாதுகாப்பு வீழ்ச்சி தொடர்பான இச்சம்பவத்தை பொலிசார் தற்போது கையாள்வதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், அந்த 7 பேர் கொண்ட கும்பல் எண்ணெய்க் கப்பலை கடத்த முயன்றதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என கூறப்படுகிறது.

பகல் 9 மணியளவில் Nave Andromeda என்ற அந்த கப்பலில் இருந்து துறைமுக அதிகாரிகளுக்கு அவசர உதிவிக் கேட்டு அழைப்பு வந்துள்ளது.

மேலும், கப்பல் ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பு கருதி, கப்பலின் ஒரு அறையில் பதுங்கி இருப்பதாகவும் தகவல் வெளியானது.

இதனையடுத்து துரிதமாக செயல்பட்ட பொலிசார், அதிரடி நடவடிக்கைய்ல் களமிறங்கினர்.

மேலும், கப்பல் நிறுத்தப்பட்டிருக்கும் பகுதியில் 5 மைல்கள் அளவுக்கு பாதுகாப்பு வளையம் அமைத்துள்ளனர்.

மட்டுமின்றி இந்த விவகாரம் தொடர்பில் உள்விவகார செயலர் பிரித்தி பட்டேலுடன் அதிகாரிகள் தரப்பு ஆலோசனை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

தற்போது அந்த கப்பலுக்கு கடலோர காவல்படை மற்றும் மாநகர பொலிசாரின் ஹெலிகொப்டர்கள் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கப்பல் ஊழியர்களை பத்திரமாக மீட்பதே முதற்கட்ட பணி என கூறும் அதிகாரிகள், திருட்டுத்தனமாக பயணம் செய்துள்ள அந்த 7 பேரின் கோரிக்கை தொடர்பான எவ்வித தகவலும் வெளியாகவில்லை என்றே தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்