பிரித்தானியாவில் முதலில் இவர்களுக்கு தான் கொரோனா தடுப்பூசி போடப்படும்! ஆக்ஸ்போர்டு விஞ்ஞானி கூறிய முக்கிய தகவல்

Report Print Basu in பிரித்தானியா
939Shares

ஆசிரியர்கள், பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் பிற முன்னணி தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று ஆக்ஸ்போர்டு விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி எவ்வாறு விநியோகிப்பது மற்றும் முதலில் யாருக்கு போட வேண்டும் என்பதை திட்டமிடத் தொடங்க வேண்டிய நேரம் இது என ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் சுகாதார பொருளாதார ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் பேராசிரியர் பிலிப் கிளார்க் தெரிவித்தார்.

பல தொழிலாளர்களை நாம் பாதுகாக்க வேண்டும், ஆனால், முதல் அலையின் போது சுகாதார ஊழியர்கள் பல மடங்கு பாதிக்கப்பட்டனர்.

சுகாதார அதிகாரிகளுக்கு அடுத்தபடியாக யாரை பாதுகாக்க வேண்டும் என்பது குறித்து ஆசோசனை நடத்த வேண்டும் என நான் நினைக்கிறேன்.

நாம்மிடம் போதுமான அளவு தடுப்பூசி இருந்தால் அனைவரையும் பாதுகாக்க வேண்டும், ஆனால், யாருக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பது மிக முக்கியம்.

பேருந்து ஓட்டுநர்கள், டாக்ஸி ஓட்டுநர்கள், ஓட்டுநர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட வெளியே சென்று ஆபத்தான சூழலில் பணியாற்றும் அனைவருக்கும் நாம் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

நிச்சயமாக வயது வைத்து தான் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும், ஆனால் இந்த நடவடிக்கை உண்மையில் சமநிலைப்படும் செயலாகும். கொரோனாவால் பாதிக்க மற்றும் இறக்க அதிக வாய்ப்புள்ளவர்கள் உட்பட பல காரணங்களை நாம் கருத்தில் கொள்ள வேண்டும் என பிலிப் கிளார்க் குறிப்பிட்டார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்