நாடு முழுவதும் பலர் கைது... கிறிஸ்துமஸ் சாதாரணமாக இருக்காது: பிரதமர் ஜான்சன் வெளியிட்ட அதிமுக்கிய தகவல்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

நவம்பர் 5 முதல் நாடு முழுவதும் அமுலில் இருந்து வரும் கொரோனா பரவல் ஊரடங்கை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பலர் இதுவரை கைதாகியுள்ளனர்.

பிரித்தானியாவில் இரண்டாவது தேசிய ஊரடங்கு நவம்பர் 5 முதல் அமுலில் இருந்து வருகிறது.

எதிர்வரும் டிசம்பர் 2-ம் திகதி ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்படும். ஆனால் இந்த ஊரடங்கு மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிப்பதாக கூறி,

சுதந்திரம் வேழ்ண்டும் என்ற கோரிக்கையுடன் நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் ஒரு சாரார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுவரை முக்கிய நகரங்களில் இருந்து ஆர்ப்பாட்டத்தின் இடையே வன்முறையில் ஈடுபட்டதாக கூறி, 22 பேர் கைதாகியுள்ளனர்.

இந்த நிலையில் இன்று ஊடகங்களில் தோன்றி பேசிய பிரதமர் ஜான்சன், டிசம்பர் 2 -ம் திகதி கண்டிப்பாக ஊரடங்கு விலக்கப்படும்.

ஆனால், வழமையான கிறிஸ்துமஸ் பண்டிகையாக இந்த முறை இருக்காது எனவும், கடுமையான கட்டுப்பாடுகள் டிசம்பர் 2-கு பிறகு அமுலுக்கு கொண்டுவரப்படும் எனவும் எச்சரிக்கை செய்துள்ளார்.

முன்பு அமுலுக்கு கொண்டுவந்தது போன்ற மூன்றடுக்கு முறை மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் கொண்டுவரப்படும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த பண்டிகை காலத்தில் எத்தனை பேர் ஒன்று கூட அனுமதிப்பது என்பது தொடர்பில் தெளிவான ஒரு தகவலை திங்களன்று அறிவிப்பதாகவும் பிரதமர் ஜான்சன் குறிப்பிட்டுள்ளார்.

மூன்றடுக்கு முறை கட்டுப்பாடுகள் என்பது இனி ஊரடங்கைவிட கடுமையாக இருக்கும் என்றே பரவலாக பேசப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்