பிரித்தானியாவில் சுமார் 1000 பேருக்கு மேலாக தவறுதால கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் குறித்து பிரித்தானியாவில் ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கு பின்பு இறப்பு மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெளியிடப்பட்டு வருகிறது.
கொரோனா தொற்றால் பிரித்தானியாவில் 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 47 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில், தற்போது பிரித்தானியாவில் சுமார் 1311 பேருக்கு தவறுதலாக கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பிரித்தானிய சுகாதாரத் துறை அமைச்சகம், கடந்த நவம்பர் 19 முதல் நவம்பர் 23 வரையிலான கொரோனா பரிசோதனையில் 1,311 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக தவறுதலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அவர்களுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் கடந்த சில வாரங்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரித்து வந்தது. உயிரிழப்பும் நூற்றுக்கணக்கில் உயர்ந்தது.
இதன் காரணமாக அங்கு கொரோனா வைரஸ் 2-வது அலை உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.