பேஸ்புக்கில் புகைப்படத்தை வெளியிட்டு மாயமான பிரித்தானிய இளம்பெண்: பொதுமக்கள் உதவியை நாடும் பெற்றோர்

Report Print Arbin Arbin in பிரித்தானியா
142Shares

பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் தினத்தன்று ஆண் ஒருவருடன் மாயமான இளம்பெண் தொடர்பில் அவரது பெற்றோர் பொதுமக்கள் உதவியை நாடியுள்ளனர்.

கிழக்கு யார்க்ஷயரின் ஹல் நகரில் டிசம்பர் 25 அன்று கடைசியாக காணப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் 19 வயதேயான Chloe Fewster அதன் பின்னர் குடியிருப்புக்கு திரும்பவில்லை என்றே கூறப்படுகிறது.

சம்பவத்தன்று ஆண் நண்பர் ஒருவருடன் இருக்கும் புகைப்படத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட அவர், அதன் பின்னரே மாயமாகியுள்ளார்.

அந்த ஆண் நண்பர் அவரது காதலராக இருக்கலாம் என குறிப்பிட்ட குடும்ப உறுப்பினர்கள், அந்த நபரே Chloe Fewster மாயமாவதற்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

ஆனால் இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் இதுவரை எதையும் உறுதி செய்யவில்லை.

தாம் எப்போது தொடர்பு கொண்டாலும், தமது மகள் தமக்கு பதிலளிப்பார் என குறிப்பிட்டுள்ள Chloe Fewster-ன் தாயார் கெர்ரி, அந்த நபரால் ஏமாந்துவிடாதே என கண்ணீருடன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தமது மகளுக்கு நெருக்கமான தோழிகள் அவர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிய வந்தால் கண்டிப்பாக தம்மிடமோ அல்லது பொலிசாரிடமோ பகிர வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் முன்வைத்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்