குடும்பத்துடன் இரவு உணவு... சுருண்டு விழுந்து மரணமடைந்த பிரித்தானிய சிறுவன்: வீணான தாயாரின் போராட்டம்

Report Print Arbin Arbin in பிரித்தானியா
912Shares

பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் தினத்தன்று 12 வயது சிறுவன் திடீரென்று சுருண்டு விழுந்து மரணமடைந்த சம்பவம் அவரது மொத்த குடும்பத்தையும் உலுக்கியுள்ளது.

12 வயதேயான Cason Hallwood சம்பவத்தன்று மிகுந்த உற்சாகத்துடனே காணப்பட்டுள்ளார்.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நண்பர்கள் மற்றும் உறவினர்களை சந்திக்கும் திட்டமும் அவருக்கு இருந்துள்ளது.

தாயார் மற்றும் மூன்று சகோதரர்களுடன் வசித்து வந்த Cason Hallwood, கிறிஸ்துமஸ் அன்று தமது தாத்தா மற்றும் பாட்டியுடன் இணைந்து இரவு உணவை சாப்பிட்டுள்ளார்.

பின்னர் அருகாமையில் அமைந்துள்ள பூங்கா ஒன்றிற்கு சில மணி நேரம் கழித்து சென்றுள்ளார்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த பூங்காவில் வைத்து திடீரென்று Cason Hallwood சுருண்டு விழுந்துள்ளார்.

தொடர்ந்து மூச்சுத்திணறல் இருப்பதாக கூறிய Cason Hallwood, தமது தாயாரை தொடர்பு கொண்டுள்ளார்.

தாயார் Louise ஆஸ்துமாவுக்கான உடனடி நிவாரணியுடன் குறிப்பிட்ட பூங்காவிற்கு விரைந்துள்ளார்.

அங்கிருந்து அவரை Crewe-ல் உள்ள Leighton மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுவன் Cason Hallwood மருத்துவமனையில் பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.

அம்மா செல்லமான Cason Hallwood எப்போதும் அவர் தாயாரின் அரவணைப்பிலேயே இருந்து வந்துள்ளார்.

சிறுவன் Cason Hallwood ஒவ்வாமை தொடர்பிலான ஒருவகை அதிர்ச்சியாலையே மரணமடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், உடற்கூராய்வு முடிவுகள் வெளியான பின்னரே உண்மையான காரணம் தெரிய வரும் எனவும் மருத்துவர்கள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்