கொரோனா வைரஸால் நாளுக்கு நாள் அதிக பாதிப்புகள் எதிர்கொண்டுவரும் பிரித்தானியா, இப்போது புதிய புதிய பொது விழிப்புணர்வு பிரச்சாரங்களை வெளியிடத் தொடங்கியுள்ளது.
பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 68,053 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளநர். இது தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கையில் புதிய உச்சமாகும். அதேபோல், நேற்று ஒரே நாளில் 1,325 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர்.
இதன்முலம், பிரித்தானியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்னிக்கை 2.89 மில்லியனாக பதிவாகியுள்ளது. மேலும் 78, 508 இறப்புகள் பதிவாகியுள்ளது.
மீண்டும் தேசிய உரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதால், மக்களுக்கு கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அரசாங்கம் பல புதிய பிரச்சாரங்களில் ஈடுபட்டுவருகிறது.
அதனை தொலைக்காட்சி, ரேடியோ, செய்தித்தாள்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது.

இந்த விழிப்புணர்வு பிரச்சார விளம்பரத்தில், நாட்டின் தலைமை மருத்துவ அதிகாரி கிறிஸ் விட்டி , புதிய உருமாறிய கொரோனா வைரஸ், நாடு முழுவதும் விரைவாக பரவி வருகிறது.
இது பலருக்கு கடுமையான நோய்க்கான ஆபத்தை ஏற்படுத்துவதால், NHS மீது அதிக அழுத்தம் ஏற்படுகிறது.
மேலும் தடுப்பூசிகள் எதிர்காலத்திற்கு தெளிவான நம்பிக்கையைத் தருகின்றன, ஆனால் இப்போதைக்கு நாம் அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும் மற்றும் உயிர்களைக் காப்பாற்ற வேண்டும் என கூறியுள்ளார்.
அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும். வெளியே செல்வது அவசியம் என்றால், உங்கள் கைகளை அடிக்கடி கழுவவும், முகக்கவசங்களை அணியுங்கள், சமூக இடைவெளியை கடைபிடியுங்கள் இவை அனைத்தையும் எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.
மேலும், ஒவ்வொருவரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதைப் போல நடந்து கொள்ளும்படி மக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.