மொத்தமாக 220 மில்லியன் பவுண்டுகள் மதிப்பு... தூக்கி வீசிய பிரித்தானிய இளைஞர் சன்மானம் அறிவித்து கெஞ்சல்

Report Print Arbin Arbin in பிரித்தானியா
1812Shares

சுமார் 220 மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான பிட்காயின் தரவுகளை சேமித்து வைத்திருந்த hard drive ஒன்றை தவறுதலாக தூக்கி வீசிய பிரித்தானிய இளைஞர் தற்போது அதைத் தேடி வருகிறார்.

குறித்த hard drive-ஐ கண்டெடுத்து அவரிடம் ஒப்படைக்கும் நபருக்கு 55 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் வழங்கப்படும் எனவும் அந்த இளைஞர் அறிவித்துள்ளார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு காலகட்டத்தில், பிட்காயின் என்ற டிஜிட்டல் நாணயம் நடைமுறையில் பயனற்றதாக இருந்தபோது James Howells என்ற இளைஞர் தமது கணினியில் சுமார் 7,500 பிட்காயின் தரவுகளை சேமித்து வைத்துள்ளார்.

ஆனால், இது தொடர்பில் மொத்தமாக மறந்திருந்த குறித்த இளைஞர் 2013-ல் நியூபோர்ட், வேல்ஸ் பகுதியில் உள்ள தமது குடியிருப்பு அருகே அமைந்துள்ள குப்பை கொட்டும் இடத்தில் தேவையற்ற பொருட்களுடன் அந்த பிட்காயின் தரவுகள் கொண்ட கணினி பாகத்தையும் தூக்கி வீசியுள்ளார்.

காலப்போக்கில் பிட்காயின் மதிப்பு மின்னல் வேகத்தில் உயரவே, தற்போது அந்த 7,500 பிட்காயினின் மதிப்பு 220 மில்லியன் பவுண்டுகள் என கூறப்படுகிறது.

தமது அறியாமையை உணர்ந்த இளைஞர் James Howells, குப்பை கொட்டும் தளத்தின் நிர்வாகிகளுக்கு முறைப்படி கோரிக்கை வைத்துள்ளார்.

ஆனால் அவர்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தமது பிட்காயின் தரவுகள் கிடைக்கப்பெற்றால் 55 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் அளிப்பதாக உறுதி கூறியுள்ளார்.

தம்மிடம் ஒரேப்போன்ற இருவேறு தரவுகள் சேமிப்பகம் இருந்ததாகவும், ஆனால் தாம் தவறான ஒரு சேமிப்பகத்தை தூக்கி வீசியதாகவும் தற்போது தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்