பிரித்தானியாவில் இரண்டாவது கட்டமாக கொரோனா தடுப்பு மருந்து ஆசியர்கள் மற்றும் பொலிசாருக்கு செலுத்தும் பணி துவங்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாகி வருகிறது. இதனால் வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கு கடுமையான ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தற்போது இரண்டாவது கட்டமாக ஆசிரியர்கள், பொலிசாருக்கு கொரோனா தடுப்பு மருந்து செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிரித்தானியா மருத்துவ குழு தெரிவிக்கையில், பிரித்தானியாவில் இரண்டாவது கட்டமாக ஆசிரியர்கள், பொலிசார், வணிகர்களுக்குக் கொரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட உள்ளது. சுகாதாரப் பணியாளர்களுக்கு அடுத்து இவர்களுக்குச் செலுத்துவது முக்கியமானது என்று தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸுக்கு எதிராக மாடர்னா தடுப்பு மருந்து சிறப்பாகச் செயல்படுவதாக, தற்போது வரை சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்குக் கொரோனா தடுப்பு மருந்து போடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், பிரித்தானியாவில் தற்போது புதிய வகை கொரோனா வைரஸ், ஏற்கெனவே இருக்கும் கொரோனா வைரஸைவிட 70 சதவீதம் வேகமாகப் பரவும் வேகம் கொண்டதாக இருப்பதால், பிரித்தானியாவுக்கான விமானச் சேவையை 40-க்கும் மேற்பட்ட நாடுகள் தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது,