14 வயது சிறுவனின் முகத்தில் 10 பவுண்ட் எடையுள்ள கட்டி

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்காவில் 14 வயது சிறுவனின் மூக்கில் இருந்த சிறிய கட்டி தற்போது 10 பவுண்ட் எடையுள்ள பெரிய கட்டியாக மாறியுள்ளதால், சிறுவன் மிகுந்த வேதனைக்குள்ளாகியுள்ளான்.

அமெரிக்காவின் மியாமி நகரைச் சேர்ந்தவன் ஸயசு(14), இவனுக்கு 11 வயது இருக்கும் போது மூக்கில் சிறிய அளவிலான பருவு போன்ற கட்டி இருந்துள்ளது.

இது நாளைடைவில் பெரிதாக மாறி சிறுவனின் முகத்தை மறைக்கும் மற்றொரு முகம் போல் வளர்ந்துள்ளது. இதன் காரணமாக அவனின் மூக்கு மற்றும் மேல் தாடை எலும்புகள் பாதிக்கப்பட்டுள்ளது.

மூக்கு வழியாக சுவாசிக்க முடியாமல் வாயால் சுவாசித்து வரும் சிறுவனுக்கு பார்வையும் பாதிக்கப்பட்டுள்ளது.

மகனின் இந்த பரிதாப நிலையில் இருந்து எப்படியாவது மீட்டு, மற்ற சிறுவர்களைப் போன்று இருக்க வேண்டும் என்று கருதி பல மருத்துவமனைகளின் கதவைத் தட்டியதாகவும் தற்போது தான் மருத்துவர்கள் கைகொடுத்திருப்பதாகவும் சிறுவனின் தந்தை கூறியுள்ளார்.

மேலும் அவன் கூடிய விரைவில் குணமாகும் நாளை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்