7 வயதில் மார்பக அறுவை சிகிச்சை செய்த சிறுமி

Report Print Deepthi Deepthi in அமெரிக்கா
1145Shares

அமெரிக்காவை சேர்ந்த 7 வயது சிறுமி மார்பக அறுவை சிகிச்சை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனது செல்ல மகள் ஆசையாக கெஞ்சி கேட்டுக்கொண்டதால் இந்த அறுவை சிகிச்சையை அவளுக்கு பரிசாக அளித்துள்ளேன் என அவரது தாய் Dana Manson தெரிவித்துள்ளார்.

கலிபோர்னியாவை சேர்ந்த Juliet Manson(7) என்ற சிறுமிக்கு, தனது மார்பகத்தை பெரிதாக்கி கொள்ள வேண்டும் என்பதில் ஆசை இருந்துள்ளது.

இதுகுறித்து தனது தாயிடம் தெரிவித்துள்ளார். ஆனால், உனக்கு தற்போது 7 வயதாகிறது. நீ வளர ஆரம்பிக்கும்போது உடல் உறுப்புகள் வளரும் என தனது மகளிடம் தெரிவித்துள்ளார்.

ஆனால், தாயின் இந்த பதிலால் திருப்தியடையாத Juliet, தனது உடல் குறித்து கவலை கொண்டு, தனது தாயிடம் தினம் தினம் கெஞ்சியவாறு இருந்துள்ளார்.

இதற்கு தாய் ஒத்துழைக்காத காரணத்தால் மன அழுத்தம் அடைந்துள்ளார்.

ஆனால் கலிபோர்னியாவில் இந்த சிறு வயதிலேயே மார்பக அறுவை சிகிச்சை செய்ய எந்த ஒரு மருத்துவமனையும் முன்வரவில்லை.

இதனால், தனது மகளின் ஆசையை நிறைவேற்றுவதற்காக சீனாவில் உள்ள ஒரு மருத்துவமனையை தொடர்பு கொண்டு அனுமதி வாங்கியுள்ளார்.

அதன்படி, கிறிஸ்துமஸ்க்கு இரண்டு நாட்களுக்கு முன்பு சீனாவிற்கு சென்று தனது மகளுக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளார். இதையே தனது மகளுக்கு தான் கொடுத்துள்ள கிறிஸ்துமஸ் பரிசு எனவும் கூறியுள்ளார்.

இந்த புகைப்படங்களை Juliet தனது சமூகவலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார், இதனை பார்த்த பலரும் இப்படி சிறு வயதில் இந்த அறுவை சிகிச்சை தேவைதானா? என கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்