மகள் வயது பெண்ணை இருமுறை திருமணம் செய்து கொண்ட 72 வயது கோடீஸ்வரர்

Report Print Raju Raju in அமெரிக்கா
488Shares
488Shares
ibctamil.com

அமெரிக்காவின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான எட் பாஸ் (72) சாஷா கமாச்சோ (36) என்ற பெண்ணை இரண்டு முறை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

எண்ணெய் சம்மந்தமான தொழில் உட்பட பல்வேறு தொழில்களை செய்து வரும் எட் பாஸின் சொத்து மதிப்பு 2.6 டொலர் பில்லியன் என போர்ப்ஸ் பத்திரிக்கை கணக்கிட்டுள்ளது.

இவர் தனது காதலி சாஷாவை கடந்த மாதம் 16-ஆம் திகதி டெக்ஸாஸில் உள்ள போர்த் வர்த் நகரில் திருமணம் செய்து கொண்டார்.

பின்னர் மீண்டும் சாஷாவை மெக்சிகோவின் சான் மிக்குல் டி அலெண்டே நகரில் இரண்டாவது முறையாக கிறிஸ்துமஸுக்கு சில நாட்களுக்கு முன்னர் எட் மணந்தார்.

இந்த திருமணத்தை நீதிபதி டேவிட் ஈவன்ஸ் சட்டபூர்வமாக நடத்தி வைத்தார், கடந்த வியாழக்கிழமை புது மண தம்பதிகள் தங்கள் நெருங்கிய நண்பர்களுக்கு போர்த் வார்த் நகரில் விருந்து வைத்தனர்.

எட் பாஸ் மற்றும் சாஷா இருவருக்குமே இது முதல் திருமணம் கிடையாது, பல ஆண்டுகளுக்கு முன்னரே விக்கி என்ற பெண்ணை திருமணம் செய்த எட் அவரை விவாகரத்து செய்துவிட்டார்.

அதே போல சாஷாவும் தனது முதல் கணவரை கலிபோர்னியாவில் கடந்த 2009-ல் விவாகாரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்